சிகிச்சையின் முதற்கட்டமாக மதுரையின் பாலரெங்கபுரத்தில் மண்டல புற்றுநோய் மையத்தில் ஸ்டீரியோடாக்டிக் ரேடியோதெரபி சிகிச்சை மூலம் 6 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ‘அதிநவீன நேரியல் முடுக்கி’ என்ற கதிரியக்க கருவி மூலம் ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ தெரபி சிகிச்சையை மிகத்துல்லியமாக, மற்ற உறுப்புகளுக்கு எந்தவிதமான கதிரியக்க பாதிப்பும் இல்லாமல் புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கும் வகையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஸ்டீரியோடாக்டிக் ரேடியோதெரபி மூலம் வாஸ்குலார் குறைபாடு, பிட்யூடரி கட்டிகள், உறைப்புற்று, அக்குவஸ்டிக் நியூரோமா, குளோமஸ் டி உள்ளிட்ட நோய்களையும் கட்டுப்படுத்த முடியும்.