‘மகிழ்ச்சி, சோக ஹார்மோன்கள்’ மூளையின் செரோட்டோனின் அளவை சமநிலையில் வைக்க சில வழிகள்...

‘மகிழ்ச்சி, சோக ஹார்மோன்கள்’ மூளையின் செரோட்டோனின் அளவை சமநிலையில் வைக்க சில வழிகள்...
‘மகிழ்ச்சி, சோக ஹார்மோன்கள்’ மூளையின் செரோட்டோனின் அளவை சமநிலையில் வைக்க சில வழிகள்...
Published on

நமது மூளை மகிழ்ச்சி மற்றும் சோக ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இது செரட்டோனின் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் நமது மனநிலை மற்றும் நடத்தையை தீர்மானிக்கிறது. இந்த ஹார்மோன்தான் நமது அறிவாற்றல், ஞாபகசக்தி மற்றும் கற்றலுக்கு அடிப்படையாக அமைகிறது. மனநலனில் முக்கியப்பங்கு வகிக்கும் இந்த ஹார்மோன் குறையும்போதுதான் மனநலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. செரட்டோனின் அதிக அளவில் இருந்தாலும் பிரச்னை; குறைந்தாலும் பிரச்னை. இது உடலுக்கு நல்லதல்ல. ஹார்மோன்களை பொறுத்தவரை எப்போதும் சமநிலையில் இருக்கவேண்டும்.

செரோட்டோனின் அளவை சமநிலையில் வைக்க சிலவழிகள்:

உடற்பயிற்சி - உடற்பயிற்சியானது ரத்தத்தில் ட்ரிப்டோபன் சேர வழிவகை செய்கிறது. இதயத்துடிப்பு சீராக இருக்க உடற்பயிற்சி செய்வது அவசியம். ஏரோபிக்ஸ் அல்லது ஜும்பா பயிற்சிகளில் ஈடுபடுவது நல்ல ரிசல்ட் கொடுக்கும். இது மூளை இயல்பாக செயல்பட உதவிசெய்கிறது. இதுதவிர நீச்சல், ஜாக்கிங், மலையேற்றம் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

சூரியஒளி - பிரகாசமான விளக்கு மற்றும் சூரியஒளி போன்றவை மூளையில் செரட்டோனின் சுரக்க உதவிசெய்கிறது. எனவே ஒருநாளில் குறைந்தது 30 நிமிடமாவது சூரியஒளியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுவதோடு மனநல பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.

மசாஜ் - திசுக்களுக்கு நன்கு மசாஜ் கொடுப்பது மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியைக் கொடுக்கிறது. நீண்ட நாட்களாக மன அழுத்தப் பிரச்னைகளால்
பாதிக்கப்பட்டிருக்கிறவர்கள் கட்டாயம் மசாஜ் செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உணவு - நேரடியாக உணவுகளின்மூலம் செரட்டோனின் உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமற்றது. ஆனால் சில ட்ரிப்டோபன் அதிகமுள்ள உணவுகளை
எடுத்துக்கொள்ளலாம். சிவப்பரிசி, ஓட்ஸ், பால் சீஸ், நட்ஸ், கோதுமை பிரட், அன்னாசி பழம் போன்றவை செரட்டோனின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

தியானம் - மூச்சுப்பயிற்சியுடன் கூடிய தியானம் செய்வது மனநலனுக்கான சாவி என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இது மூளைக்கு செல்லும் நரம்புகளை ரிலாக்ஸ் செய்வதுடன், செரட்டோனின் சுரப்புக்கும் காரணமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com