இயற்கையாக சருமத்தை ஈரப்பதமாக வைக்க சிம்பிள் டிப்ஸ்

இயற்கையாக சருமத்தை ஈரப்பதமாக வைக்க சிம்பிள் டிப்ஸ்
இயற்கையாக சருமத்தை ஈரப்பதமாக வைக்க சிம்பிள் டிப்ஸ்
Published on

வெயில்காலம் வந்தாலே வியர்வை, பிசுபிசுப்பு போன்ற காரணங்களால் முகப்பரு, கருமை போன்ற பிரச்னைகள் உருவாகும். அதே சமயத்தில் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மேலும் வறட்சி அதிகமாகும். சில சிம்பிள் டிப்ஸ் சருமத்தை ஈரப்பதத்துடனும், அதேசமயம் பொலிவுடனும் வைத்திருக்க உதவும்.

தேன்

வறண்ட சருமத்தின்மீது தேனை தடவி 15-20 நிமிடங்கள் விடவேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வறட்சி மாறும்.

கற்றாழை ஜெல்

வறண்ட சருமத்தின்மீது சுத்தமான கற்றாழை அல்லது ஜெல்லை தடவி மிருதுவாக மசாஜ் செய்யவும். 10-12 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீரால் கழுவவும்.

பால் அல்லது மோர்

பால் அல்லது மோரை வறண்ட சருமத்தின்மீது அடிக்கடி தடவி 10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வறட்சி மாறி சருமம் பளபளப்பாகும்.

அவகேடோ

அவகேடோவின் சதைப்பகுதியை பேஸ்ட்போல் அரைத்து வறண்ட சருமத்தின்மீது தடவி 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீரில் கழுவவும்.

எண்ணெய்கள்

பாதாம், ஆலிவ், லாவண்டர் போன்ற எண்ணெய்களை சிலதுளிகள் உள்ளங்கையில் எடுத்து, சருமத்தில் தேய்த்து சில நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். சருமம் விரைவில் எண்ணெயை உறிஞ்சிக்கொள்ளும். அதானால் ஆடைமீது கறைபடியாது.

கோகோ பட்டர்

கோகோ பட்டரை மெல்லியதாக வெட்டி, சருமத்தின்மீது மெதுவாகத் தேய்க்க அது கொஞ்சம் கொஞ்சமாக உருகி சருமத்தின்மீது படரும். சிறிதுநேரம் கழித்து கழுவலாம். வேண்டுமானால் இதை கழுவாமல் அப்படியே விட்டுவிடலாம். சீ பட்டர் மற்றும் மேங்கோ பட்டரையும் பயன்படுத்தலாம்.

வெள்ளரி ஜூஸ்

வெள்ளரிக்காயை அரைத்து சற்று தண்ணீர் சேர்த்த பேஸ்ட்டாக்கவும், பாரஃபின் வாக்ஸை 90 நொடிகள் உருக்கி, அதில் இந்த பேஸ்ட்டை சேர்க்கவும். அதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து சருமத்தின்மீது தடவ மாய்ஸரைசர் செய்ததுபோல் இருக்கும்.

அதிக தண்ணீர் குடிப்பது சருமத்தை ஈரப்பதத்துடனும், பொலிவாகவும் வைக்கும் என்பதை மறவாதீர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com