மழைக்கால நோய்களும்.. அதற்கான அறிகுறிகளும்..! தற்காப்புக்கு என்ன செய்யலாம்?

மழைக்கால நோய்களும்.. அதற்கான அறிகுறிகளும்..! தற்காப்புக்கு என்ன செய்யலாம்?
மழைக்கால நோய்களும்.. அதற்கான அறிகுறிகளும்..! தற்காப்புக்கு என்ன செய்யலாம்?
Published on

மழைக் காலங்களில் நோய்களை வரவழைப்பது அசுத்தமான குடிநீரும், சுற்றுச்சூழலும்தான். இப்போது அனைவரும் வந்த நோயைத் தீர்க்க போராடப் பழகி வருவது வழக்கமாயிற்று. பொதுவாகவே மழைக் காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள் குழந்தைகள்தான். இளம் பிஞ்சுகள் நோய்வாய்ப்பட்டு மீண்டு வருவதற்குள் அவர்களின் ஆரோக்கியம் ஒரு வழியாகிவிடும். குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.\

 நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்க

  • அயர்ன், உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவும். ஆகையால் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதோரும் கீரை வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம்.
  • தின்பண்டங்களுக்கு பதில் பாதாம்,கேரட், பேரீச்சம் பழம் மேலும் பழ வகைகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்வது அவசியம்.
  • தினசரி உணவுகளில் இஞ்சி, பூண்டு தவறாது எடுத்துக் கொள்வது நல்லது.

சளி
மழைக் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் எளிதில் சளி பிடிப்பது இயல்பு.

  • சூடானபாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும்.  பாதிப்புகள் இல்லாத நாட்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். சளி மற்றும் இருமலில் சிக்கித் தவிப்பவர்கள  வாரம் ஒருமுறையாவது ஆவி பிடித்தல் அவசியம்.
  • ஒரு வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும்.  தனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் சாப்பிட்டு வரச் சளி குறையும். 

மழைக் காலங்களில் கொசுக்களால் ஏற்படும் நோய்கள் சற்று அதிகமாகத் தலைதூக்கும். மலேரியா, டெங்கு, மூளை அழற்சி, சிக்கன் குனியா போன்ற  பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அறிகுறிகள் அறிந்து கொள்வது அவசியம்.

மூளை அழற்சி

இது மூளையில் ஏற்படும் ஒரு அழற்சி நோய்.  வைரஸ் பாக்டீரியா தாக்கப்படுவதே இந்நோய்க்குக் காரணம். இதனால் தலைவலி, உடல் களைப்பு, காய்ச்சல், குழப்பம், சோர்வு ஆகியவையே இதற்கு அறிகுறி. 

மலேரியா 

கொசுக்களின் மூலம் ஏற்படும் நோய்களில் மலேரியா ஒன்று.  இக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகம் பரவும் ஒன்றாக இருக்கிறது.  காய்ச்சல், உடல்நடுக்கம், தசைவலி, சோர்வு ஆகியவை இதன் அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனவே வீடுகளுக்கு முன்பு திறந்த வெளிகளில் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

டெங்கு காய்ச்சல் 

சமீப காலமாகத் தமிழக மக்களை உலுக்கி வரும் நோயாக டெங்கு காய்ச்சல் உள்ளது. காய்ச்சல், மூட்டு வலி, தடிப்புகள் உடலில் தென்படும். இக்காய்ச்சலும் கொசுக்களால்தான் ஏற்படும்.  

காலரா 

மழைக்காலத்தில் வரும் கொடிய நோய்களின் பட்டியலில் முதலிடம் பெறுவது காலரா. அசுத்தமான குடிநீரை அருந்துவதால் காலரா ஏற்படுகிறது. இந்நோய் தாக்கப்பட்டால் கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்படுவதோடு உடல் சோர்வும் ஏற்படும். 

சிக்கன் குனியா

மிகையான காய்ச்சல், மூட்டு வலி, கடுமையான தலைவலி மற்றும் தூக்கமின்மையும் இதன் அறிகுறிகள். கொசுக்களின் மூலமே இந்நோய் பரவுகிறது.   

தற்காப்பு நடவடிக்கைகள்

  • மழைக்காலத்தில் செரிமானம் சற்று மந்தமாக இருப்பதால் அளவோடு உணவருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
  • கிருமிகள் உடலில் தங்கிவிடாமல் தவிர்க்கத் தினசரி வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
  • காலை சமைத்ததை இரவு சாப்பிடுவதையும், இரவு சமைத்ததை மறுநாள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
  • நார்ச்சத்து,புரதச்சத்து, மாவுச்சத்து, உயிர்ச்சத்துகள், கொழுப்புச் சத்து  என அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.
  • காபி,தேநீரை அதிகம் உட்கொள்வதற்குப் பதில் மூலிகை சூப், ரசம், கிரீன் டீ முதலியவற்றை அருந்தலாம்.
  • மழை நேரங்களில் கைக் குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும்.   
  • மழை காலங்களில் குளிர்ந்த பானங்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு மிதமான சூட்டில் பானங்களை எடுப்பது அவசியம்.
  • குளிர்பானங்கள், ஐஸ்கீரிமை தவிர்ப்பது நன்று.
  • வாகனங்களில் பயணிக்கும்போது மாஸ்க், கையுறைகளை அணிவதால் தொற்றுநோய்களிலிருந்து தப்பிக்கலாம்.
  • தேங்கிக் கிடங்கும் தண்ணீரில் நடந்துசென்றால் சோப் பயன்படுத்தி கால்களை கழுவிவிட வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com