புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட துடிப்பவர்களுக்கு உதவுவதற்காகவே செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. quitbot என அழைக்கப்படும் இந்த செயலி புகைப்பழக்கத்தை கைவிட விரும்புவோருக்கு ஒரு உற்ற துணையைப் போல் செயல்படுகிறது.
எல்லன் என செயற்கை நுண்ணறிவு குரல், புகைப்பழக்கம் இருப்பவருடன் பேசி அவரை உற்சாகப்படுத்துவதுடன், அவரை பாராட்டவும் தவறுவதில்லை. புகைப்பிடிக்கவேண்டும் என்ற உந்துதலை தவிர்ப்பதற்கு உரிய அறிவுரைகளையும் அவ்வப்போது வழங்குகிறது இந்த செயலி. புகைப்பழக்கத்தை விட நினைப்பவர்களுக்காக இதற்கு முன்பும் பல்வேறு செயலிகள் இருந்தாலும் இந்தச் செயலிக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
மற்ற செயலிகள் போல் இல்லாமல் இந்த செயலியுடன் ஒருவர் இருவழிஉரையாடலை மேற்கொள்ள முடிகிறது. புகைப்பிடித்தல் குறித்து 20 ஆண்டுகள் ஆய்வில் இருக்கும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றால் 6 ஆண்டு பரிசோதனைகளுக்கு பிறகு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. படிப்படியாக 42 நாட்களில் புகைப்பழக்கத்தை விட இந்த செயலி உதவும் என சொல்லப்படுகிறது. தற்போது ஆங்கிலத்தில் உரையாடும் இந்த செயலில் விரைவில் தமிழிலும் பேசும் என நம்புவோம்.