ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் குறித்த மாநாட்டில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார். அதில் பேசிய அவர், “ரஷ்ய அறிவியலாளர்கள் புதிய வரலாறு படைக்க உள்ளனர். புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கான மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டறியும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அந்த பணி நிறைவடைந்தால் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர்கள் மிகுந்த பயனடைவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எந்த வகையான புற்றுநோய்க்கான தடுப்பூசியை ரஷ்ய அறிவியலாளர்கள் கண்டறிய உள்ளனர், அது எவ்வாறு செயல்படும் என்பது குறித்தெல்லாம் புதின் பேசவில்லை. இந்த மருந்து அறிமுகம் செய்யப்பட்டால் உலகின் முதல் புற்றுநோய்க்கான தடுப்பூசியாக இது இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இங்கிலாந்து - ஜெர்மனி நாடுகளும் இணைந்து புற்றுநோய்க்கான நிரந்தர தீர்வு தரும் மருந்தை கண்டறியும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.