கோடைக்காலத்தில் இத்தனை நோய்கள் வருமா! குழந்தை வளர்க்கும் தாய்மார்களே உங்களுக்குத்தான் இந்த வீடியோ!

குழந்தைகளுக்கு கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்கள் என்ன? அவற்றிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்து கொள்ளலாம். இது குறித்த மருத்துவர் விளக்கம்.
குழந்தை நலம்
குழந்தை நலம்பாதுகாப்பு
Published on

கோடைக்கால பாதிப்பு என்பது பெரியவர்கள் , சிறியவர்கள், கர்ப்பிணிகள் என எல்லா தரப்பு மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? அவை ஏற்படாமல் எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து விளக்குகிறார் குழந்தை நல நிபுணர் டாக்டர் சிவகுருநாதன்.

குழந்தை நல நிபுணர் டாக்டர் சிவகுருநாதன்
குழந்தை நல நிபுணர் டாக்டர் சிவகுருநாதன்
குழந்தை நலம்
தாங்க இயலாத வாகன இரைச்சல் இதயத்திற்கு ஆபத்தாக முடியலாம்! - மருத்துவஆய்வு விடுக்கும் எச்சரிக்கை என்ன?

கோடை கால நோய்கள் என்ன?

குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, அம்மைநோய்கள்,மஞ்சள் காமாலை, பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை,சின்னம்மை, டைப்பாய்டு வர வாய்ப்பு உள்ளது. மேலும், வைரஸ் போன்றவற்றால் ஏற்பட கூடிய நோய்களால் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இதிலிருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம்

  • குழந்தைகள் சரியான அளவு நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அவர்கள் உடலில் போதுமான அளவு நீர்சத்து உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

  • ஒவ்வொரு குழந்தையும் 2 முதல் 3 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும்.

  • சரியான முறையில் சிறுநீர் கழிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

  • வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், வெயில் நேரத்தில் குழந்தைகள் வெளியில் வெல்வதை தவிர்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com