ஒமைக்ரான் பரவலை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குலேரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விழிப்புணர்வு காணொலியில் பேசியிருக்கும் அவர், டெல்டா திரிபுவை போல, ஒமைக்ரான் திரிபுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படாது என கூறினார்.
தனிப்பட்ட நபர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை கருத்தில் கொண்டும் ஒமைக்ரானை எதிர்கொள்ள மருத்துவர்கள் தயாராக வேண்டும் என கூறிய அவர், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாலும், இயற்கையாகவே இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் திறன் காரணமாகவும், ஒமைக்ரானை கண்டு அச்சம் அடைய தேவையில்லை எனக் கூறினார். அதே நேரம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் மக்கள் கவன செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.