சீனாவில் மூளையை பாதிக்கும் புதிய வைரஸின் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெட்லேண்ட் வைரஸ் -WELV என்றழைப்படும் இந்த “ஈர நில வைரஸ்”, மூளையை பாதிக்கும் வைரஸ் என்றும், இவை ஒட்டுண்ணி பூச்சி கடிப்பதால், ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வகையான வைரஸ், முதன்முதலில் 2019 ஆம் ஆண்டு ஜின் ஜோ நகரில் 61 வயதான நோயாளி ஒருவருக்கு இருப்பது அடையாளம் காணப்பட்டது. இவரை, இவ்வைரஸால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணி பூச்சி கடித்ததால், ஐந்து நாட்கள தீவிர காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவதியைடைந்துள்ளார்.
இந்தநிலையில்தான், வடக்கு சீனாவில் இத்தகைய பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா? என்று ஆராய்ச்சியாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் 14,600 ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 2% WELV வைரஸ் இருப்பதும், இவை முதன்மையான ஹீமாபிசஸிஸ் கன்சின்னா என்ற இனத்தை சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், WELV ன் RNA ஆடு, குதிரைகள், பன்றிகள் போன்றவற்றிலும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் இருந்த 640 வனக்காவலர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை இந்நோய்க்கான ஆண்டிபாடிகளை கண்டறிய ஆய்வுக்கு உட்படுத்தியதில், 12 பேருக்கு ஆண்டிப்பாடி இருப்பது கண்டறியப்பட்டது.
இதில், 20 நபர்களுக்கு இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டால் ஏற்படும் காய்ச்சல், தலைசுற்றுதல், தலைவலி , குமட்டல், வயிற்றுப்போக்கு அறிகளுடன் , பாசிட் முடிவும் வந்திருந்தது. இந்நிலையில், சிகிச்சைப்பெற்று வந்தவர்களில், ஒரே ஒரு நோயாளி மட்டும் மூளை மற்றும் முதுகெலும்பு திரவத்தில் உள்ள அதிக வெள்ளை இரத்த அணுகளின் எண்ணிக்கை காராணமாக கோமாவிற்கு தள்ளப்பட்டார்.
ஆனால், அனைவரும் இதிலிருந்து நலம்பெற்றனர். ஆனால், எலிகள் மீது இது குறித்து ஆய்வு நடத்தியபோது, WELV வைரஸ் தொற்றானது, நரம்பு மண்டலத்தை பாதிப்பதாகவும், குறிப்பாக மூளை சம்பந்தப்பட்ட கடுமையான உடல்நலப்பிரச்னைகளை ஏற்படுத்த சாத்தியம் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.