திருவாரூரில் ரத்த மாதிரிகளுடன் சாலையில் வீசப்பட்ட ஊசிகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தகுடியில், 200 க்கும் மேற்பட்ட ரத்த மாதிரியுடன் ஊசிகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்தது. அனைத்து ஊசிகளிலும் ரத்தம் இருந்தது. இது மழைநேரம் என்பதால் மழைபெய்யும்போது ஊசியிலிருந்து ரத்தம் வெளியேறும் அபாயமும் இருந்துவருகிறது. அப்படி வெளியேறினால், அதனால் நோய்ப்பரவல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் எனக்கூறி, மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இதுபற்றி கூறுகையில், ‘இப்பகுதியில் நிறைய ஸ்கேனிங் செண்டர் இருப்பதால், யார் இத்தகைய அலட்சியமான காரியத்தை மேற்கொண்டிருப்பர் என இப்போதைக்கு தெரியவில்லை. விசாரணையை துரிதப்படுத்தியுள்ளோம். விரைவில் கண்டறிவோம்’ எனக்கூறினர்.