மெனோபாஸை நெருங்கும் பெண்களா நீங்கள்? - உங்களுக்கான தகவல்கள் தான் இது!

மெனோபாஸை நெருங்கும் பெண்களா நீங்கள்? - உங்களுக்கான தகவல்கள் தான் இது!
மெனோபாஸை நெருங்கும் பெண்களா நீங்கள்? - உங்களுக்கான தகவல்கள் தான் இது!
Published on

பொதுவாக பெண்களுக்கு 40 வயதை தாண்டினால் மெனொபாஸ் ஆரம்பித்துவிடும். அச்சமயத்தில் அவர்கள் மிகவும் மன அழுத்தம், அதிக சோர்வு ஆகிய பிரச்சனைகளை எதிர்நோக்குவார்கள். சொல்லப்போனால், பெண்களுக்கு மிகவும் பிரச்சனையான காலகட்டம் இது. இப்பிரச்சனைக்கு தீர்வு குறித்து டாக்டர் நித்யா ராமசந்திரன் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விவரங்கள்.

மெனொபாஸ் அப்படி என்றால் என்ன? அதன் பிரிவுகள் என்ன?
மெனோபாஸ் அப்படி என்றால், பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும் காலகட்டம் . 40 வயதை கடந்த பெண்கள் ஒவ்வொருவரும் இப்பருவத்தை எதிர்கொள்வார்கள்.
பொதுவாக பெண்கள் பிறந்தது முதல் அவர்களின் ஒவ்வொரு பருவ கால கட்டத்தையும் மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடுவோம், ஆனால் மெனோபாஸ் பருவத்தை தவிர்த்து. இதை பற்றிய விழிப்புணர்வு யாருக்கும் கிடையாது. இதை பற்றி யாரும் வெளிப்படையாக பேசுவதும் கிடையாது. பொதுவாக மெனொபாஸில் 3 கட்டங்கள் இருக்கிறது. 1. ஸ்பெரீ மெனோபாஸ், மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ்.

ஸ்பெரீ மெனோபாஸ் காலகட்டம் 5 முதல் 10 வருடங்கள் வரை இக்காலகட்டத்தில் சினைப்பைகள் சினைமுட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்தி இருக்கும். இது உடனடியாக நிறுத்தாமல், கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொள்ளும் காலம் தான் ஸ்பெரீ மொனோபாஸ்

மெனோபாட் அப்படின்னா என்ன?
மொனோபாஸ் சமயத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக பெண்களின் இடுப்பு பகுதி மற்றும் தொடை, அடிவயிறு ஆகியவற்றில் அளவுக்கு அதிகமாக சதை போடும் அவர்களின் உடல் அமைப்பே மாறிவிடும். இடுப்பில் ஒரு டயர் போன்று தோற்றம் கொடுக்கும் இதை தான் மெனோபாட் என்கிறோம்.

ஃபீரீ மெச்சூர் மெனோபாஸ் இது பற்றி கூறுங்கள்
இந்தியாவை பொறுத்த வரைக்கும் 45 வயதிலிருந்து 50 வயதினருக்கே மெனோபாஸ் ஆரம்பிக்கும் காலகட்டம். ஆனால் சில பெண்களுக்கு சீக்கிரமாக அதாவது 40 வயதில் மெனோபாஸ் ஆரம்பித்து விடும். இது தான் ஃப்ரீ மெச்சூர் மெனோபாஸ்.

மெனோபாஸ் ஆரம்பிக்கும் முன் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை என்ன? என்ன?
நிறைய பிரச்சனை இருக்கு. திடீரென்று வியர்வை வெளியேரும். குறிப்பாக மேல் உடலில், நெற்றி முகம் கழுத்து என்று. அதுவும் 20 செகண்ட் தான் வியர்வை வெளியேறும். பின் தானாக அது சரியாகிவிடும். இரவில் தூக்கம் சரிவர வராது. ஒரு படபடப்பு தொற்றிக்கொள்ளும். இதை எதிர்நோக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். தன்னம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். அடிக்கடி மறதி ஏற்படகூடும். மூட்டு வலி கால் வலி கை வலி ஆரம்பிக்கும். எலும்பு தேய்மானம் அதிகரிக்கும். இச் சமயத்தில் அடி பட்டாலோ அல்லது தவறி விழுந்தாலோ எலும்புகள் உடையவும் வாய்ப்புகள் அதிகம். இதையெல்லாம் தாண்டி இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். ஈஸ்டரஜன் என்னும் ஹார்மோன் தான் பெண்களுக்கு ஹார்ட் அடாக் வராமல் பாதுகாக்கும், 45 வயதுக்கு மேல் பெண்களுக்கு இத்தகைய ஹார்மோன் குறைவதால், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். அடுத்து தோலில் வரட்சி தன்மை அதிகரிக்கும். அளவுக்கு அதிகமாக தலை கேசம் உதிர ஆரம்பிக்கும் . தள்ளாமை ஏற்படகூடும். எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது. இத்தகைய சூழலை அப்பெண்ணால் கூட புரிந்துக்கொள்ள முடியாது. இதை பற்றிய விழிப்புணர்வை சமீப காலமாகதான் பேசி வருகிறோம்.

மெனோபாஸ் ஒரு பெண்ணை எமோஷனலா பாதிக்குமா?
கண்டிப்பாக பாதிக்கும். நீர் பையில் பிரச்சனை, அவர்களை அறியாமலேயே சிறுநீர் வெளியேறும், மற்றும் அவ்விடத்தில் அரிப்பு ஏற்படும். தாம்பத்தியத்தில் விருப்பம் இருக்காது. தாம்பத்தியத்தின் விருப்பமின்மை கணவன் மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு தோன்றலாம். இந்த ஒரு பிரச்சனைக்காக தம்பதியர் மருத்துவர்களை நாடுகிறார்கள்.

இத்தனை அறிகுறிக்கும் என்ன காரணம்?
இது அனைத்திற்கும் ஒரே காரணம் பெண்களின் ஹார்மோனில் மாற்றம் ஏற்படுவது தான். பெண்களின் ஓவரியிலிருந்து சுரக்கும் அமிலமானது நின்று விடுகிறது. அது தான் இந்த பிரச்சனை அனைத்திற்கும் காரணம்

இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடு பட பெண்கள் எந்த மாதிரியான காரியங்களை மேற்கொள்ள வேண்டும்?

முதலில் இதை பற்றி நன்கு புரிதல் ஏற்பட வேண்டும் . அதற்கு நிறைய படிக்கவேண்டும். ஒத்த வயது பெண்களுடன் இது குறிது பேசவேண்டும். இது ஒரு வியாதி அல்ல... இது ஒரு இயற்கை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். குடும்ப மருத்துவர், மற்றும், மகப்பேறு மருத்துவரிடம் இது குறித்து பேசுங்கள். இதற்கு ட்ரீட்மெண்ட் இருக்கிறது. ஹார்மோன் இன்பாலன்சை சரி செய்ய மருத்துவம் இருக்கு. HRT (Hormone Replacement Theraphy) இது தேவைப்படும் பெண்களுக்கு வழங்குவோம். இது அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்யும். ஆனால், இதற்கு எதிர் வினை (side effects) இருக்கும். எடுத்துகாட்டாக வாமிட்டிங் போன்ற உபாதைகள் தோன்றும் . இதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இலலை. இதை உட்கொள்ளும் பொழுது மேற்கணட சிம்டெம்ஸ் குறையும். ஆனால் உடல் சரியாகும் வரை 3 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரை பார்க்க வேண்டி வரும்.

மெனோபாஸ் ஆரம்பிக்கும் முன்னரே இத்தகைய குறைப்பாடுகளை தடுக்க ட்ரீட்மெண்ட் இருக்கா?
இருக்கு, சாப்பாட்டில் கட்டுப்பாடு தேவை. நார் சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அடுத்தது மெனோபாஸ் சமயத்தில் அதிகப்படியான உடல் பருமன் இருக்கும் அதே சமயத்தில் தசைகள் வலு இழக்கும். அதனால் உடற்பயிற்சி அவசியம். ஆகயால் உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் நம்மை கட்டுக்குள் வைக்கும். காய்கறி வகையில் காரட், பீன்ஸ், ப்ரூகோலி பட்டாணி இது போல் காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இதையும் தாண்டி குடும்ப உறுப்பினர்கள் அவ்ர்களை புரிந்துக்கொண்டு நடந்துக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் வெவ்வேறு வகையான தாக்கங்கள் வருகிறதே... ஏன் எல்லா பெண்களுக்கும் ஒன்றுப்போல் வருவதில்லை?
அது அவரவர்கள் உடல்வாக்கை பொறுத்து.

போஸ்ட் மெனோபாஸ் எப்படி இருக்கும்?
அதாவது ஒரு வருடமாக மாதவிடாய் வரவில்லை என்றால் அவர்கள் மெனோபாஸில் அடி எடுத்து வைக்கிறார்கள் என்று அர்த்தம். இச் சமயத்தில் கம்பீட் செக்கப் ஒன்று அவசியம் செய்துக்கொள்ளவேண்டும். மாமோகிரா செய்து கொள்ளவேண்டும்.

கற்பப்பை அகற்றிய பிறகு மெனோபாஸ் வருவதற்கு அறிகுறி இருக்கா?
ஓவரிஸ் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு மெனோபாஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது , இது சர்ஜிகல் மெனோபாஸ் என்று சொல்லுவோம்.

மெனோபாஸூகான டெஸ்ட் என்னென்ன?
எல்லா பெண்களுக்கும் இந்த டெஸ்ட் அவசியம் இல்லை.
ப்ரீ மெட்ச்சூர் மெனோபாஸ் பெண்களுக்கு டெஸ்ட் அவசியம். ஒரு வருடமாக மாதவிடாய் வராமல் திடீரென்று வந்தால் அவசியம் மருத்துவரை பார்க்கவேண்டும். ஏனெனில் இது புற்றுநோய்க்கான அறிகுறி.

மெனோபாஸ் சமயத்தில் பெண்கள் கருவுற வாய்புள்ளதா?
வாய்ப்பு இருக்கு. அவசியம் டெஸ்ட் எடுத்துக்கொள்ளவேண்டும். 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் சினை முட்டை ஹெல்தியா இருக்காது. அப்பொழுது பிறக்கும் குழந்தையும் ஹெல்தியா இருக்காது.

தற்காலத்தில் இது குறித்து விழிப்புணர்வு அவசியம் தேவை. பெண்கள் கூடிய வரையில் தங்களுக்கென்று ஒரு நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு எப்பவும் மகிழ்சியாக வாழ பழகிக்கொண்டால் எத்தகைய பிரச்சனையையும் சமாளித்துவிடலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com