surgery
surgeryfreepik

கேரளா: 110 வயது மூதாட்டிக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து அசத்திய மருத்துவர்கள்!

கேரளாவில் 110 வயதுடைய மூதாட்டியொருவருக்கு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு பழையபடி அவரை எழுந்து நடமாட வைத்துள்ளனர் மருத்துவர்கள்.
Published on

கேரளா திருச்சூர் மாவட்டம் சாவக்காட்டை சேர்ந்த பாத்திமா என்ற 110 வயது மூதாட்டி, இரவு குளியலறைக்கு சென்றிருக்கிறார். அச்சமயம் எதிர்பாராமல் அவர் தவறி விழுந்ததில் மூதாட்டியின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது அன்றாட வேலையில் ஈடுபடமுடியாமல் தவித்துப்போயுள்ளார். இதையடுத்து வலியால் அவதிப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினர் அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிறப்பு குடிமக்கள் திட்டத்தின் கீழ் அனுமதித்துள்ளனர்.

மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவருடைய உடல்நிலை இயல்பாக இருந்துள்ளது. முழு சுயநினைவுடன், நல்ல நினைவாற்றலுடன் இருந்திருக்கிறார் அவர்.

பொதுவாக மருத்துவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு, அறுவை சிகிச்சை போன்ற கடினமான மருத்துவத்தை அளிக்க தயங்குவார்கள். முதியவர்கள் உடலளவில் பலவீனமாக இருப்பர் என்பது உட்பட, இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கும் விதத்தில் இங்கு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அதன்படி குடும்பத்தினரின் ஒப்புதல் மற்றும் மூதாட்டியின் சம்மதத்தை பெற்ற அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், 110 வயதான மூதாட்டிக்கு மிகவும் கடினமான அறுவை சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர். இதன் முதல் கட்டமாக மருத்துவக்குழு ஒரு புதுமையான அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளது.

அதாவது மிகவும் பயனுள்ள Fascia iliaca என்ற சிகிச்சையின் மூலம் மூதாட்டிக்கு முதல் கட்ட அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மருத்துவத்தில் வலியை குறைக்க உதவும் ஒரு முறை. இந்த அதிநவீன தொழில்நுட்பம் 12 மணிநேரத்திற்கு முழுமையான வலி நிவாரணத்தை அளிக்கும். இம்முயற்சிக்கு பிறகு மூதாட்டிக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

surgery
நீரிழிவு நோயால் கண் பாதிப்பு வருமா? - நீரிழிவு ரெட்டினோபதி பற்றிய முக்கிய தகவல்கள்!

எலும்பியல் மூத்த ஆலோசகர் டாக்டர் பிரின்ஸ் ஷான்வாஸ் காந்த் என்பவரின் தலைமையிலான குழு, மூதாட்டிக்கு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து 2 மணி நேரம் கண்காணிப்பு மற்றும் ஒரு நாள் ஐசியூவில் அவர் கண்காணிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப்பிறகு மூதாட்டி வழக்கம் போல் தனது அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டு, முன்னைப்போல் எழுந்து நடக்கிறாராம்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com