”ஆலியா இல்லைனா பாத்ரூம்கூட போகமாட்டேன்” : ரன்பீர் கபூர் - எமோஷனல் சார்பு நல்லதா கெட்டதா?

”ஆலியா இல்லைனா பாத்ரூம்கூட போகமாட்டேன்” : ரன்பீர் கபூர் - எமோஷனல் சார்பு நல்லதா கெட்டதா?
”ஆலியா இல்லைனா பாத்ரூம்கூட போகமாட்டேன்” : ரன்பீர் கபூர் - எமோஷனல் சார்பு நல்லதா கெட்டதா?
Published on

பாலிவுட்டின் ஃபேவரைட் கப்புலாகவும் பிசியான ஜோடியாகவும் உலா வருகிறார்கள் ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதி. அவ்வப்போது சில ரொமான்டிக் ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து காண்போரை பொறாமைக் கொள்ளச் செய்யும் அளவுக்கான கெமிஸ்ட்ரியுடன் இருந்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில், பிரம்மாஸ்திரா படத்துக்காக நவ்பாரத் டைம்ஸ் தளத்திற்கு பேட்டியளித்துள்ள இந்த தம்பதி ஒருவரை ஒருவர் பற்றி கூறியிருப்பது இணைய வாசிகளை பெரிதளவில் கவர்ந்திருக்கிறது. அது என்னவெனில், “வெளியே பார்ப்பதற்குதான் மிகவும் சுதந்திரமான தனிமையில் இருக்கும் நபராக இருப்பேன். ஆனால் உண்மையில் எப்போதுமே ஆலியாவையே சாந்திருப்பேன்.

அவர் எங்கே இருக்கிறார் என தெரியாமல் பாத்ரூம் கூட போக மாட்டேன். அவர் எப்போதும் என்னருகில் இருக்க வேண்டும். ரொமான்டிக்காக எதுவும் செய்யாவிட்டாலும், எதுவும் பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை. வெறுமனே என்னுடன் கூட இருந்தாலே போதுமானதாக இருக்கும்” என ரன்பீர் கூறியிருந்தார். இதனை ஆலியா பட்டும் உறுதிபடுத்தியிருந்தார்.

இந்த பேட்டி வைரலாகவே ஆலியா பட்டை எமோஷனல் ரீதியாக முழுக்க முழுக்க சார்ந்திருக்கக் கூடிய ஒரு நபராக ரன்பீர் இருக்கிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், “உங்கள் துணையை சார்ந்திருப்பது இயல்பானதுதான். ஆனால் உங்களது மகிழ்ச்சிக்காக அவர்களை நம்பியிருந்தால் அந்த உறவு சமநிலையற்ற, ஆரோக்கியமற்றதாக மாறும்” என உளவியலாளர்கள் கூறியிருப்பதாக டைம்ஸ் நவ் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எமோஷனலாக சார்ந்திருப்பது என்றால் என்ன?

ஒரு நபர் தனது உணர்வுகளுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க முடியாத மனநிலையை கொண்டிருப்பதுதான் எமோஷனல் சார்பு என்கிறார்கள் உளவியலாளர்கள். அவர்களுக்குள்ளும் சோகம், துக்கம், பதட்டம், மனக்கஷ்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்த முடியாத நிலையில் இருப்பார்கள்.

பொதுவாக ஒரு நபர் தான் மகிழ்ச்சியாக உணர மற்றவர்களை நம்பியிருக்கும் போது இந்த உணர்ச்சி சார்பு நிலை ஏற்படுகிறது, இது ஆபத்தான தாக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் அவர்களின் மன உறுதியையும் நல்வாழ்வையும் பாதிக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

எமோஷனல் சார்பு நிலையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

காதல் உறவில் இருக்கும் ஒருவர் சங்கடமான உண்மைகளை அறிய நேர்ந்தால் அந்த உணர்ச்சி ரீதியான சார்பு மனநிலை மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமையும்.

ஒரு நபர் தனது மதிப்புக்கு பொறுப்பேற்காமல், மற்றவர்களைச் சார்ந்து இருப்பது அவரது பலவீனத்தை காட்டுகிறது என்று மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதனால், உறவில் பாதுகாப்பின்மை, கைவிடப்பட்ட பிரச்சினைகள் மற்றும் மோசமான சுய-கவனிப்பு போன்ற உணர்வுகளுடனான உறவில் இது பெரிய மோதல்களுக்கு வழிவகுக்கும்.

உணர்ச்சி சார்புநிலை அதிகளவு மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. இது மூட் ஸ்விங்ஸ், நிலையான மனச்சோர்வு, கோபம் அல்லது சோகத்தின் திடீர் வெளிப்பாடுகள், கடுமையான வன்முறை உணர்வுகள், தலைவலி, வயிற்று வலி போன்ற உடல் அறிகுறிகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கிறார்கள்.

எமோஷனல் சார்புக்கான அறிகுறிகள்:

* தொடர்ந்து மற்றவர்களுடன் நெருக்கமாக இருக்கத் தோன்றும்.
* பாதுகாப்பு
* உங்கள் துணைக்கு போதுமான நபராக இல்லை என்ற உணர்வு
* காதல் உறவை இழந்து விடுவோமோ என்ற பயம்
* தங்கள் துணை மீது முழு கவனம் செலுத்தாமல் போவதால் வரும் குற்ற உணர்வு
* உளவியல் மற்றும் உடல் ரீதியான துன்பங்களை ஏற்றுக்கொள்வது
* கவலையின் நிலையான மற்றும் மேலாதிக்க உணர்வு
* பொறாமை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com