புரோட்டீன் பவுடர்களை மருத்துவரின் அனுமதி இல்லாமல் எடுத்து கொள்ளலாமா? - உணவு நிபுணர் சொல்வதென்ன?

தற்சமயங்களில் புரோட்டீன் பவுடர்களின் புழக்கம் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளவிரும்புவர்கள், உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் என மக்களிடையே இதன் தேவை அதிகரித்து வருகிறது.
புரதம்
புரதம்முகநூல்
Published on

தற்சமயங்களில் புரோட்டீன் பவுடர்களின் புழக்கம் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளவிரும்புவர்கள், உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் என மக்களிடையே இதன் தேவை அதிகரித்து வருகிறது.

ஆகவே இந்த செய்தி தொகுப்பில், புரோட்டீன் பவுடர்களை மருத்துவரின் அனுமதி இல்லாமல் எடுத்து கொள்ளலாமா? புரோட்டீன்களின் பங்கு நமது உடலில் என்ன? எந்த அளவு புரோட்டீ உடலுக்கு தேவை என்பது குறித்து விளக்குகிறார் விளையாட்டு உணவியல் நிபுணர் ஷைனி சுரேந்திரன்.

புரதத்தினை முக்கியத்துவம்?

  • புரோட்டீன்கள் பங்கு உடலுக்கு மிகவும் தேவை. தசை, தோல், முடி மற்றும் அனைத்து திசுக்களிலும் நிறைந்து காணப்படும் புரோட்டீன்கள் உடலின் பல நிகழ்வுகளுக்கு இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

  • உடலில் பல இரசாயன விளைவுகளை உண்டாக்கும் என்சைம்களையும், இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்தி செல்லும் ஹீமோகுளோபினையும் உருவாக்குவதில் புரதத்தின் பங்கு அதிகம்.

  • நோய்த்தொற்றுகள் மற்றும் நோயினை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்க உதவுகிறது.

  • செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மேலும் புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது.

  • அமினோ அமிலங்களினால் கட்டமைக்கப்படுவதே புரதம். நம் உடலில் அமினோ அமிலங்கள் சேமித்து வைக்கப்படுவதில்லை, ஆனால் நம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் பல்வேறு வழிகளில் உருவாக்கப்படுகிறது.

புரதம் நிறைந்த உணவுகள்

மீன்

கோழி

மட்டன்

சோயா பீன்ஸ்

முட்டை

பால்

தயிர்

பன்னீர்

நட்ஸ்

அந்தவகையில், ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இவை நாம் உண்ணும் உணவின் மூலமாக உடலை வந்தடைகிறது.

  • ஹிஸ்டைடின்,

  • ஐசோலூசின்,

  • லியூசின்,

  • லைசின்,

  • மெத்தியோனைன்,

  • ஃபைனிலாலனைன்,

  • த்ரோயோனைன்,

  • டிரிப்டோபான்

  • அத்தியாவசிய அமினோ அமிலங்கள்

பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு

பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு (RDA) என்பது- ஒருவரின் உடல் எடை*0.8 - *1 கிடைக்கும் அளவாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இந்த அடிப்படை அளவு என்பது பெரும்பாலானோருக்கு குறைவாகவே இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

யார் அதிக அளவு புரதத்தினை எடுத்து கொள்ளலாம்?

1) தசையின் பருமனை மேம்படுத்த உணவுத் திட்டத்தில் அதிக புரத உணவுகளைச் சேர்ப்பது அவசியம்.

2) உடற்பயிற்சி செய்து முடித்தப்பின்னர் தசைகள் தளர்ச்சியடைந்த நிலையில் அதனை சரி செய்ய புரதம் அவசியம்.

3) எடை இழப்புக்கு புரதம் ஒரு நல்ல திருப்தி அளிக்கிறது, கார்போஹைட்ரேட்டுக்கான ஏக்கம் குறைகிறது, முழுமை உணர்வு அடையப்படுகிறது.

4) நீரிழிவு நோய்க்கு இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. புரதம் கொண்ட உணவுகளை அளவில் அவ்வளவு பாதிப்பினை ஏற்படுத்தாது.

5) மனநிலையை மேம்படுத்துகிறது

6) ஆரோக்கியமான மூளை செயல்பாடு மற்றும் கற்றலை ஊக்குவிக்கிறது

7) வலுவான எலும்புகளுக்கு

8) இதய ஆரோக்கியத்திற்கு

9) முதுமையை மெதுவாக்குகிறது மற்றும் நீண்ட ஆயுளை ஊக்குவிக்கிறது

அதிக புரத உணவு யாருக்கு தேவையில்லை

1) சிறுநீரக பிரச்சினைகள்

2) GI அசௌகரியம் உள்ளவர்களுக்கு அதாவது மலச்சிக்கல், வீக்கம், அசிடிட்டி போன்ற பிரச்னை உடையவர்கள் புரத உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது.

3) கல்லீரல் பிரச்சினை உடையவர்கள்

4) டிஹைடுரேட்

5) கீட்டோ சுவாசம் - துர்நாற்றம் வீசுவது நீங்கள் கெட்டோசிஸில் இருப்பதைக் குறிக்கலாம் - உடலானது குளுக்கோசுக்குப் பதிலாக கொழுப்பை எரிக்கும்போது, துர்நாற்றம் நிறைந்த சுவாசம் வெளிவரும். இது உங்களுக்கு கீட்டோ சுவாசம் இருப்பதை உறுதி செய்கிறது. இத்தகைய நிலை உடையவர்கள் அதிக அளவு புரதத்தினை எடுத்துக்கொள்ள கூடாது.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் புரோட்டீன் பவுடரை பரிசீலிக்க முடியுமா?

விலங்குகள் அல்லது தாவரங்களில் இருந்துதான் புரதம் பவுடர்கள் உருவாக்கப்படுகிறது. அதாவது பசுவின் பால் அல்லது முட்டை ,பட்டாணி, அரிசி, சோயா போன்றவற்றை கூறலாம். இவற்றிலிருந்து புரதங்கள் பிரித்தெடுக்கும் செயல்முறையின் போது இயற்கையாக உணவு பொருட்களில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், தாதுக்கள் நார்ச்சத்து நீக்கப்பட்டு பிறகு புரதப்பவுடர்களாக உருவாக்கப்படுகிறது.

ஆகவே புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் ஊட்டச்சத்து நிபுணரை அணுகி எடுத்து கொள்ள விரும்புபவர்களின் தற்போதைய ஊட்டச்சத்து நடைமுறை, உடற்பயிற்சி பழக்கம், வயது, உயரம் மற்றும் எடை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சரியான ஆலோசனையைப் பெற்றப்பிறகுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் சைவம் மற்றும் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் குடல் ஆரோக்கியம், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எடுத்து கொள்ள வேண்டும்.

எடை தூக்குபவர்களில் புரத பவுடர்களின் பங்கு?

எடைத்தூக்குபவர்களுக்கு புரோட்டீனின் தேவை என்பது அதிகம். ஆகவே புரோட்டீன் பவுடர்கள் மூலமாக உடலுக்கு தேவையான அதிக அளவு புரோட்டீன் கிடைக்கிறது.

மேலும் இந்த புரோட்டீன் பவுடர்கள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இருப்பினும் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்வது அவசியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com