மாதந்தோறும் மாதவிடாய் சீராக இருந்தாலே பெண்களின் உடல்நலமாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். அதுவே சீரற்ற முறையிலோ அல்லது மாதவிடாய் ஏற்படவில்லை என்றாலோ உடல்நலக்குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கும் பெண்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம்.
மாதவிடாய் சீராக இருக்க சில எளிய வழிகள்:
தொடர்ந்து கண்காணியுங்கள்: மாதவிடாய் சீராக இருப்பதை உறுதிசெய்ய தேதி மற்றும் அறிகுறிகளுடன் அதன் தொடர்பான விஷயங்களை கண்காணிப்பது அவசியம். இது சீரற்ற மாதவிடாய் பிரச்னைகளை தவிர்க்க உதவும்.
நன்றாக சாப்பிடுங்கள்: முழு உடல் ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியமான உணவு அவசியம். ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் உடற்பருமன், சமநிலையற்ற ஹார்மோன்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது சீரற்ற மாதவிடாயை ஏற்படுத்தும்.
உடலுழைப்பு முக்கியம்: மாதவிடாய் அசௌகரியத்தை உண்டாக்கினாலும் உடல் ஆரோக்கியத்திற்கு இது அவசியம். அதற்கு உடலுழைப்பு மிகமிக அவசியம்.
போதுமான ஓய்வு: தேவையான உறக்கமின்மை மற்றும் சர்க்கார்டியன் சுழற்சியில் ஏற்படும் மாற்றம் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இது மாதவிடாய் சுழற்சியில் மோசமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் நிபுணர்கள் எப்போதும் போதுமான ஓய்வை பரிந்துரைக்கின்றனர்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்: ஹார்மோன் சமநிலையின்மைக்கு மற்றொரு முக்கிய காரணம் மன அழுத்தம். அழுத்தத்தை குறைக்கும் வழிமுறைகளை கையாள்வது அவசியம். மாதவிடாய் சுழற்சியை சீராக மாற்றியமைக்க யோகா, தியானம் போன்றவற்றை தினசரி பழக்கப்படுத்தலாம்.