அனைத்து தரப்பு பாலூட்டிகளின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பங்காற்றும் ஒன்று இருகிறது எனில், அது கொலாஜின் தான். புரதத்தால் ஆன மனித உடலை பொருத்தமட்டில், மூன்றில் ஒரு பங்கில் கொலாஜன் என்று சொல்லப்படும் முக்கிய புரதம் உள்ளது. இவை தோல், தசை, எலும்புகள் போன்றவற்றிற்கு மிகவும் முக்கியமானது.
கொலாஜன் சருமத்திற்கு 75% பங்கு வகிக்கிறது.. கொலாஜன் நமது சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உதவுகிறது. எப்பொழுது கொலாஜன் குறைகிறதோ அப்பொழுது சருமம் தொய்வடைய ஆரம்பித்துவிடும்..
செல்களில் ஏற்படும் ப்ரீ ரேடிக்கல்கள் கொலாஜனை விரைவாக சேதப்படுத்தும்.
சருமம் மட்டுமல்லாது கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துள்ளது.
மேலும், இவை எலும்புகள், தசைகள், குருத்தெலும்புகளுக்கு வலுச்சேர்க்கிறது.
28 வகையான கொலாஜன்கள் இருக்கிறது.இதில் வகை 1 ல் உள்ள கொலாஜன்கள் மனித உடலில் 90% உள்ளது.
இவை நோய் எதிர்ப்பு சக்தி, செல்லுலார் தொடர்பு, செல்லுலார் இடம்பெயர்வு, திசு பராமரிப்புக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது.
ஃபைப்ரோபிளாஸ்ட்கள் எனப்படும் இணைப்பு திசு செல்கள் கொலாஜனை உற்பத்தி செய்து பராமரிக்கிறது.. வயதாகும் போது இந்த கொலாஜன் துண்டு துண்டாகிறது.. இதனால், ஃபைப்ரோபிளாஸ்ட்களின் செயல்பாடு பலவீனமடைகிறது.. இதன் காரணமாக. கொலாஜனின் உற்பத்தியும் குறைகிறது. இதனால், முதிர்ச்சி அடையும் போது சருமத்தில் உண்டாகும் சுருக்கங்களும், புள்ளிகளும் ,கோடுகளும் கொலாஜன் குறைவதாலேயே வருகிறது.
கொலாஜன் எனப்படுவது உடலில் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.. அதுதவிர, இதனை கோழியின் தோல் மற்றும் மீன் தோல் போன்றவற்றின் முலமும் பெறலாம். சிலர் மாத்திரைகளாகவும் இவற்றை எடுத்துக்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல ஃபேஸ் ரீம்கள் போன்றவற்றின் மூலமாகவும் எடுத்துக்கொள்கின்றனர்.
சிகரெட் புகைப்பது கொலாஜனைக்குறைக்கிறது .
சூரியனின் புற ஊதா ஒளி, புகைப்பழக்கம் மற்றும் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் பாதிப்படைகிறது. இதனால் ஒரு நபர் உடலில் உள்ள கொலாஜன் கூறுகளை இழக்க நேரிடலாம்.
காஃபைன் அதிகமாக குடிப்பது உங்க சருமத்தை வறண்டு போக வைக்கும்.
அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்க சருமத்தில் துளைகளை அடைக்க வாய்ப்பு உள்ளது. இது தோலில் உள்ள கொலாஜனை சேதப்படுத்தி வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.