எங்கு திரும்பினாலும் நோயின் தாக்கம் இருக்கிற இந்த சூழ்நிலையில் நாம் நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். சிலருக்கு சாதாரண நாட்களிலே சளி பிடிக்கும். மழை மற்றும் பனி காலங்களில் சொல்லவா வேண்டும். நம் நிழல் போல கூடவே ஒட்டிக்கொண் டுவரும் இந்த சளி ஒருவகையான வைரல் தொற்று. சளி நோய் எதிர்ப்பு சக்திகளை வலுவிலக்கச் செய்யும் தன்மையுடையது.
சளிக்கான காரணிகள்
சளியிலிருந்து விடுபட சில வழிகள்
உடலின் வெப்பநிலை
சளியினை போக்க முதலில் உடல் வெப்பத்தை அதிகரிப்பது அவசியம். குறிப்பாக தலை, தொண்டை, மார்பு மற்றும் பாதங்கள் ஆகியவற்றை வெப்பமாக வைத்துக்கொள்வது நன்று. அதற்காக ஒரு நாளைக்கு ஓரிரு முறை சூடான மற்றும் காரமான டீயை அருந்துவது அல்லது சூடான நீரில் ஒரு கரண்டி தேனும் எலுமிச்சைச் சாறும் சேர்த்து குடிக்கலாம். சீரகம், கொத்தமல்லி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
நீராவி சிகிச்சை
சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை ஊற்றி அந்த நீராவியை சுவாசிப்பதால் மூக்கில் இருக்கும் அடைப்பு நீங்கி சுவாசித்தல் எளிதாகும். சூடான நீரில் உப்பு சேர்த்து அதனை சுவாசித்தால் தலையில் உள்ள பாரம் குறையும். சூடான நீராவியை சுவாசித்தாலே சைனஸ் சம்பந்தபட்ட வலிகள் குறையும். இந்த நீராவி சிகிச்சையின் போது ஒரு அறையில் தலையினை மூடி ஆவியை பிடித்தல் நன்று.
மஞ்சள் புகை
நுரையீரலில் உள்ள கிருமிநாசினிகளை அழிக்க மஞ்சள் புகையை சுவாசித்தல் வேண்டும். ஒரு மஞ்சள் துண்டை நெருப்பில் வாட்டி அதிலிருந்து வரும் புகையை ஒரு சில நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். கட்டி மஞ்சள் கிடைக்காதவர்கள் ஒரு காய்ந்த இலையில் சூடான கரித்துண்டை எடுத்து அதன் மீது மஞ்சள் பொடியை போட்டு அதிலிருந்து வரும் புகையையும் சுவாசிக்கலாம்.