கடந்த ஆறு மாதத்தில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 201 பேருக்கு ஸ்வைன் ப்ளூ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலத்தில் 112 பேருக்கு ஸ்வைன் ஃப்ளூ பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் மிக அதிக அளவில் பாதிப்பு பதிவாகியுள்ளது.
மற்றபடி மேற்கு வங்கத்தில் 15 பேருக்கும், மகாராஷ்டிராவில் வெறும் 13 பேருக்கும், அஸ்ஸாமில் 11 பேருக்கும், தெலங்கானாவில் 7 பேருக்கும் என மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பாதிப்பு பதிவாகியுள்ளது. அதிலும் தமிழகத்தில் இரண்டு பேர், உத்தரபிரதேசத்தில் ஒருவர் என மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே பாதிப்புகள் பதிவாகியுள்ளது.