தர்பூசணி முதல் எலுமிச்சை ஜூஸ் வரை.. பருக்களை தடுக்கும் உணவுகள்!

தர்பூசணி முதல் எலுமிச்சை ஜூஸ் வரை.. பருக்களை தடுக்கும் உணவுகள்!
தர்பூசணி முதல் எலுமிச்சை ஜூஸ் வரை.. பருக்களை தடுக்கும் உணவுகள்!
Published on

அதிக நீர்ச்சத்துமிக்க உணவுகள் உடலுக்கு பலவிதங்களில் நன்மை பயக்கிறது. இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் வழங்குகிறது. மேலும் சருமத்துக்கு நன்மை பயக்கும் இந்த உணவுகள் பருத்தொல்லையிலிருந்தும் விடுதலைக் கொடுக்கிறது.

எலுமிச்சை ஜூஸ்

வெயில்காலத்தில் அதிக எலுமிச்சை எடுத்துக்கொள்ளலாம். சிட்ரிக் ஆசிட் கல்லீரலை சுத்தம்செய்து ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் சருமத்திலுள்ள அழுக்குகளை வெளியேற்றி பளபளப்புடன் வைக்கிறது.

தர்பூசணி

தர்பூசணியில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. இது சருமத்தில் படிந்திருக்கும் கறைகளை நீக்கக்கூடியது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடும்போது சருமம் புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன், முகப்பிரகாசத்தையும் கொடுக்கக்கூடியது.

பால் பொருட்கள்

கொழுப்புச்சத்து குறைந்த பால்பொருட்கள் சரும ஆரோக்யத்தை மேம்படுத்தும். பால் பொருட்களில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கட்டாயம் உணவில் இடம்பெறவேண்டியது இது.

தயிர்

தயிரில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்கள் அதிகமாகவே உள்ளது. இது சரும துவாரங்களை சுத்தம் செய்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

வால்நட்

வால்நட் தினமும் நம் உணவில் இடம்பெறுவது சருமத்தின் மிருதுத்தன்மையை அதிகரிக்கும். வால்நட் எண்ணெயில் லினோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. இது சருமத்தின் அமைப்பு மற்றும் நீரேற்றத்தை உறுதிசெய்கிறது.

ஆப்பிள்

ஆப்பிளில் பெக்டின் என்ற தனித்துவமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதே சிறந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com