ஆண்களும் சருமத்தை பராமரிக்க வேண்டுமா? - என்ன சொல்கிறார் நிபுணர்

ஆண்களும் சருமத்தை பராமரிக்க வேண்டுமா? - என்ன சொல்கிறார் நிபுணர்
ஆண்களும் சருமத்தை பராமரிக்க வேண்டுமா? - என்ன சொல்கிறார் நிபுணர்
Published on

சரும பராமரிப்பு என்றாலே அது பெண்களுக்கு மட்டும்தானா? என்றால் பெரும்பாலும் ஆம் என்றுதான் பதில் வரும். மார்க்கெட்டுகளில் விற்கப்படும் அழகுசாதனைப்பொருட்களும் பெரும்பாலும் பெண்களையேதான் குறிவைக்கின்றன. ஆனால் தன்னை அழகாகவும், பாதுகாப்பாகவும் பராமரிப்பதில் யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது? அதில் ஆண் என்ன? பெண் என்ன? தற்போது ஆண்களும் தங்கள் சருமத்தைப்பற்றி கவலைக்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். ஆண்கள் தினசரி தங்கள் சருமத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பகிர்ந்துள்ளார் சரும நிபுணர் டாக்டர் கீத்திகா மிட்டல். ஆண்கள் சருமத்தை பராமரிப்பதுடன், அதனை புத்துணர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதும் அவசியம் என்கிறார் மிட்டல்.

க்ளென்சர்

சருமத்தின்மீது எந்த அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பும், முதலில் நன்றாக சுத்தப்படுத்துவது அவசியம். அதில் அடிப்படை என்னவென்றால் சரும துவாரங்களில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவது. சருமத்தின் தன்மைக்கு ஏற்றவாறு ஒருநாளில் குறைந்தது இரண்டு முறை க்ளென்சர் பயன்படுத்தலாம். இது சருமத்திலுள்ள தூசி, அழுக்கு, மாசு மற்றும் பாக்டீரியா போன்றவற்றை சுத்தம் செய்யும்.

மாய்ஸரைசர்

சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மாய்ஸரைசரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அவசியம். சருமம் போதுமான நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்துடன் இருக்க பொருத்தமான மாய்ஸரைசரை பயன்படுத்தவேண்டும். இது இளம்வயதிலேயே சருமம் வயதாவது போன்ற தோற்றம் உருவாவதை குறைக்கும்.

ஷேவிங் முன்பு ஸ்க்ரப்

ஷேவிங் செய்வதற்கு முன்பு இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் பயன்படுத்தவேண்டும். இது பல பிரச்னைகளுக்கு காரணமான முடி உள்வளர்தலை தடுக்கும்.

ஷேவிங் பின்பு சீரம்

நிறையப்பேர் ஷேவிங் செய்தபின் முகத்தில் க்ரீம் அல்லது சீரம் தடவுவதை தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் சருமத்தை நீரேற்றத்துடன் வைக்க தினசரி ஒருமுறையாவது சீரம் பயன்படுத்துவது சிறந்தது.

சன்ஸ்க்ரீன்

ஆண் பெண் இருபாலருமே வெளியே செல்லும்போது கட்டாயம் சன்ஸ்க்ரீன் தடவவேண்டும் என்கின்றனர் சரும நிபுணர்கள். தீங்கு விளைவிக்கக்கூடிய புற ஊதா கதிர்களிடமிருந்து இது சருமத்தை பாதுகாக்கும்.

எனவே இதுவரை சருமத்திற்கு போதிய கவனிப்பும் பாதுகாப்பும் கொடுக்கவில்லை என்றால் இனிமேல் சருமத்திற்கும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com