வாரத்தில் சில தினங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்பவர்களா நீங்கள்? இந்த குட் நியூஸ் உங்களுக்குதான்!

உடல் ஆரோக்கியம் வேண்டும்தான்... ஆனால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய முடியாதே என கூறுபவர்கள் நம்மில் ஏராளம்... அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி முகநூல்
Published on

வாரத்தில் ஒன்று அல்லது 2 நாட்கள் தீவிர உடற்பயிற்சி செய்தாலே போதும்... 200 வகை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறையும் என்கிறது அமெரிக்க மருத்துவ சங்க இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை.

மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷான் குர்ஷித் என்பவர் ஆய்வு அடிப்படையில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது. இதில், "வாரத்தின் 7 நாட்களும் தினசரி 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதில் கிடைக்கும் பலனானது, வாரத்தில் ஒன்று அல்லது 2 நாட்கள் 150 நிமிடம் உடற்பயிற்சி செய்வதிலேயே கிடைத்துவிடும்" என கூறப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி
கேரளா: மீண்டும் அச்சுறுத்தும் மூளையை உண்ணும் அமீபா... மேலும் ஒருவர் மரணம்!

இருதய பாதிப்பு, பக்கவாத பாதிப்பு வாய்ப்புகள் இந்த தீவிர பயிற்சியால் வெகுவாக குறையும் என்கிறது கட்டுரை. 90 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளதாக அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com