ஆப்பிரிக்க நாடுகளை ஆட்டிப்படைத்த எபோலா - குணமானது எப்படி?

ஆப்பிரிக்க நாடுகளை ஆட்டிப்படைத்த எபோலா - குணமானது எப்படி?
ஆப்பிரிக்க நாடுகளை ஆட்டிப்படைத்த எபோலா - குணமானது எப்படி?
Published on

தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் போன்றே சில வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடுகளை ஆட்டிப்படைத்தது எபோலா வைரஸ். 1976ஆம் ஆண்டு முதன்முதலில் சாரா, தெற்கு சூடான் மற்றும் யம்புக்கு, மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரவியது. பிறகு எபோலா ஆற்றுக்கு அருகிலுள்ள இடங்களில் பரவியதால் இதற்கு எபோலா வைரஸ் என பெயரிடப்பட்டது.

அதற்குப்பிறகு 2014-16ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது 1976இல் வந்ததைவிட பெரும்சேசத்தை ஏற்படுத்தியது. கினி நாட்டில் பரவிய இந்த வைரஸ் அண்டை நாடுகளான சியாரா லியோன் மற்றும் லிபேரியாவிலும் பரவியது. அதன்பிறகு 2018-19 ஆம் ஆண்டு மத்திய ஆப்பிரிக்காவை தாக்கியது. இந்த முறை பெரும்பான்மையான மக்களை தாக்கி கொரோனா போன்றே உயிர் பயத்தைப் பரப்பியது.

எவ்வாறு பரவுகிறது?

பழந்திண்ணும் வௌவால்கள், சிம்பன்ஸி, கொரில்லா, குரங்குகள், காட்டுமான் மற்றும் முள்ளம்பன்றிகளிடமிருந்து எபோலா பரவியதாக நம்பப்படுகிறது. விலங்குகளின் திரவம், உடல் உறுப்புகள் மற்றும் ரத்தம் ஆகியவை நேரடியாக மனிதன்மீது படும்போது இந்த வைரஸ் பரவுகிறது. பிறகு மனிதனிடமிருந்து அடுத்தடுத்து காயம், ரத்தம், உடல் திரவம் மற்றும் பிற உடல் உறுப்புகள் வழியாக பரவுகிறது.

மேலும் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பவர்களுக்கும், இறந்தவர்களின் பிணத்தை புதைப்பவர்களுக்கும் எளிதில் பரவும்.

எபோலாவிலிருந்து குணமான கர்ப்பிணி பெண்களின் தாய்ப்பால் மற்றும் குழந்தைப்பிறப்பின்போது வெளியாகும் திரவம் மூலமாகவும் எபோலா வைரஸ் பரவுகிறது.

அறிகுறிகள்

எபோலா வைரஸ் தாக்கிய 2-21 நாட்களில் அறிகுறிகள் தென்படும். கொரோனாவைப்போன்றே எபோலா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கும் காய்ச்சல், சோர்வு, தசைவலி, தலைவலி, தொண்டை வறட்சி போன்ற அறிகுறிகள் தென்படும். இதுதவிர நோயின் தாக்கம் அதிகமாகும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு,
காய்ச்சல், சோர்வு, அரிப்பு, சிறுநீரகம் மற்றும் கணையம் பாதிப்பு, ஈறுகள் அல்லது பிறப்புறுப்புகளின் வழியாக ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

ஆனால் மலேரியா, டைபாய்டு மற்றும் மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளும் இதேபோன்றுதான் இருக்கும். எனவே எலிசா, ஆர்.டி- பிசிஆர், ஆன்டிஜென் சோதனை, சீரம் நடுநிலை சோதனை, எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி போன்ற சோதனைகள்மூலம் கண்டறியலாம்.

சிகிச்சை

மருந்துகள் மற்றும் நரம்பு வழி குளுக்கோஸ் ஆகியவற்றின்மூலம் குணமாக்கலாம். ஆனால் சரியான குணமாக்கும் சிகிச்சைமுறை இன்னும் கண்டறியப்படவில்லை.

ஆனால் எபோலா வைரஸிலிருந்து பெரும் பாதுகாப்பு அளிக்கும் தடுப்பூசியை 2015ஆம் ஆண்டு கினீயில் சோதனை செய்தனர். இந்த தடுப்பூசியை 11841 பேரிடம் சோதனை செய்தனர். இந்த தடுப்பூசியை பயன்படுத்திய 10 நாட்களில் எபோலா வைரஸ் முற்றிலும் குணமாக்கப்பட்டதைக் கண்டறிந்தனர். ஆனால் பயன்படுத்தாதவர்களிடம் 23 புதிய தொற்றுகள் உருவாகி இருந்ததையும் கண்டறிந்தனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

தனிமனித சுகாதாரத்தை கடைபிடித்தல் அவசியம்.
குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
ஒருமுறை எபோலாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் அதிக எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்கவேண்டும். இவர்களுக்கு மீண்டும் பாதித்தால், அதன் வீரியம் அதிகமாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com