சிசேரியன் செய்த பெண்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகமா? ஆய்வு முடிவு சொல்வதென்ன?

சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று உருவாகும் ஆபத்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சிசேரியன்
சிசேரியன் முகநூல்
Published on

'Prospective Cohort Study of Surgical Site Infections Following Single-Dose Antibiotic Prophylaxis in Caesarean Section at a Tertiary Care Teaching Hospital in Medchal' என்ற தலைப்பில், 'PLOS One' இதழில் வெளியான ஆய்வு கட்டுரை ஒன்றில் ‘சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று உருவாகும் ஆபத்து உள்ளது’ என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இளம்பெண்கள் மற்றும் பருமனான பெண்களே இத்தொற்றல் அதிகளவு (99 சதவீதம்) பாதிக்கப்படுவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத் ஒன்றில், நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கையின்படி, “சராசரியாக 24 வயதுடைய பெண்கள் இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்படி மொத்தம் 2,015 பங்கேற்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.

அவர்களில் 92 பேருக்கு SSI (அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்று) மேலோட்டமான பாதிப்பும், ஒருவருக்கு ஆழமாக தொற்று பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதிலும் 84 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதும், 8 பேர் வீட்டிற்கு சென்ற பின்னரும் பாதிப்படைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்பது சிசேரியன் காயம் நோய்த்தொற்றில் உள்ள மிகவும் பொதுவான உயிரினமாக உள்ளது. இது போன்ற உயிரினங்களே நோய்த்தொற்று ஏற்பட காரணமாக அமைகின்றன” என தெரியவருகிறது.

எவ்வாறு ஆய்வு நடத்தப்பட்டது?

CDC அளவுகோளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்த 3 நாள்களுக்கு பிறகு நோய்தொற்றுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆய்வில் பங்கேற்ற பெண்களுக்கு ஆண்டிபயாடிக், செஃப்பாசோலின் போன்ற டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிசேரியன்
புற்றுநோய்க்கான தடுப்பூசி - “இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டோம்!” - ரஷ்ய அதிபர் புதின்

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், “உடல் பருமனான பெண்களுக்கு இந்த தொற்றினை ஏற்படுத்தும் வலுவான ஆபத்து காரணிகள் இருப்பதை கண்டறிந்தோம். ஒரு மெட்டா பகுப்பாய்வின் மூலம் இவர்களுக்கு பல வகைகளிலும் காயம் மற்றும் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக தெரிகிறது” என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com