உங்கள் உணவில் ஈ உட்கார்ந்தால் அசால்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..!

உங்கள் உணவில் ஈ உட்கார்ந்தால் அசால்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..!
உங்கள் உணவில் ஈ உட்கார்ந்தால் அசால்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..!
Published on

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ராஜ மவுலி, ஒரு ஈ மனிதனை பழிவாங்கும் ‘நான் ஈ’ படத்தை இயக்கியிருந்தார். அது கற்பனையாக இருந்தாலும் நம் நிஜ வாழ்க்கையில் பறக்கும் தன்மை கொண்ட உயிரினமான ஈ நம் உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை நோக்கி படையெடுக்கும். சிலர் அதை கண்டும் காணாமல் அசால்டாக எடுத்துக் கொள்வர்.

இந்நிலையில் உணவில் ஈ உட்கார்ந்தால் என்னென்ன நடக்கும் என்பதை ஆராய்ச்சி செய்து கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்.

அந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவை….

சிறிய உயிரினமான ஈக்கள் நம் உணவில் ஏற்படுத்தும் தாக்கம் அவற்றின் அளவை விட மிகப் பெரியது மற்றும் நீங்கள் நினைப்பதை விட மிகவும் சிக்கலானது என்று சொல்லப்பட்டுள்ளது.

அது உங்கள் உணவில் வாந்தி எடுக்கலாம் 

ஹவுஸ் ஃபிளை என சொல்லப்படும் ஈக்கள் அதன் டியூப் வடிவிலான வாயினால் திரவ உணவை  உறிஞ்சுவதன் மூலம் சாப்பிடுகின்றன. பெரும்பாலும் உணவை திரவமாக மாற்ற அதன் உமிழ்நீரை துப்பி தான் அந்த உணவை உட்கொள்ளும். அது அந்த ஈ அதற்கு முன்னர் உட்கொண்ட அழுகிய உணவாக கூட இருக்கலாம். 

ஈக்கள் உணவில் முட்டையிடலாம்

நீங்கள் சுவையாக சமைத்து வைத்துள்ள உணவு திறந்திருந்தால் ஈக்கள் அதனை முட்டையிடுவதற்கான கூடாக மாற்றிக் கொள்ளும். அது உணவில் பாக்டீரியா கிருமிகளை அதிகரிக்க செய்யலாம். அதனால் உணவை எப்போதும் மூடி வைப்பது உகந்தது.

ஈக்களின் கால்கள் மற்றும் இறக்கைகளில் உள்ள பாக்டீரியா கிருமிகள் உணவை பாக்டீரியாவின் கூடாரமாகவே மாற்றும்

ஈக்களின் வெளிப்புற உடற்பகுதியில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகம் படிந்திருக்கும். ஒரு ஈ அது பறந்து செல்கின்ற பாதையில் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர் கிருமிகளை பரப்பிக் கொண்டே இருக்கும் என நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

60 க்கும் மேற்பட்ட நோய்களை ஈக்கள் சுமந்து செல்கின்றன

குப்பைகள் மற்றும் உணவுகளில் ஊர்ந்து செல்லும் ஈக்கள் மனிதர்களுக்கு குறைந்தது 65 விதமான நோய்களை பரப்பக் கூடும். வயிற்றுப்போக்கு, காலரா உட்பட பல நோய்கள் இதில் அடங்கும். மனிதர்கள் மட்டுமல்லாது கோழிகள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடையே ஈக்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் பிரைட் சைட் தெரிவித்துள்ளது.

ஆகவே உங்கள் உணவில் ஈ உட்கார்ந்தால் அசால்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com