இந்த விஷயத்தை மட்டும் பெற்றோர் கவனித்தால் போதும்! - குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு டிப்ஸ்

இந்த விஷயத்தை மட்டும் பெற்றோர் கவனித்தால் போதும்! - குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு டிப்ஸ்
இந்த விஷயத்தை மட்டும் பெற்றோர் கவனித்தால் போதும்! - குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு டிப்ஸ்
Published on

இன்றைய உலகில் பற்கள் தொடர்பான பிரச்னை இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பல் சொத்தை, பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் இனிப்புகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதால் ஆரம்பத்திலேயே பல் சொத்தை பிரச்னை வந்துவிடுகிறது.

குழந்தைகளின் பற்கள் பராமரிப்பு பற்றி பல் மருத்துவர் திருமதி.தீபப்பிரியா உடன் ஒரு உரையாடல். மருத்துவர் கூறும் அறிவுரைகள் இங்கு பார்க்கலாம்..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றால் அந்த முகத்தின் அழகோ அதில் விரியும் புன்னகையில் தெரியும். பளீரென்ற காந்தப் புன்னகை இன்றைய தன்னம்பிக்கை வல்லுனர்கள் மிக வலியுறுத்தும் ஒன்று. நல்ல புன்னகை என்பது அழகானதாக, ஆரோக்கியமானதாக அமைய வேண்டும். ஆரோக்கியமான புன்னகைக்கு அஸ்திவாரம் வரிசையான பற்கள், பற்காரையோ கறைகளோ இல்லாத சுத்தமான சீரான பல்வரிசை; நல்ல வளமான ஈறுகள், பற்குழிகள் சொத்தைப் பல் இல்லாதிருப்பது, நல்ல புன்னகை என்பது அழகானதாக, ஆரோக்கியமானதாக அமைய வேண்டும். ஆரோக்கியமான புன்னகைக்கு அஸ்திவாரம் வரிசையான பற்கள், பற்காரையோ கறைகளோ இல்லாத சுத்தமான சீரான பல்வரிசை; நல்ல வளமான ஈறுகள், பற்குழிகள் சொத்தைப் பல் இல்லாதிருப்பது, வாய் துர் நாற்றம் இன்றி இருத்தல் ஆகியவை எனலாம்.

வாய் கொப்பளித்தல்!

நாளொன்றுக்கு இரண்டு முறை தவறாமல் பல் துலக்கி, சின்னதாக சாப்பிட்டால் கூட வாய் கொப்பளிக்கவும் செய்தால் 60% பல் பிரச்சனைகளுக்கு தடா போடலாம். கொஞ்சம் சிரமம் பார்க்காது ஒரு பிளாஸ்டிக் tongue cleaner கொண்டு தினமொரு தடவை நாக்கு வழித்தால், வாய் நாற்றத்துக்கும் கூட மூடு விழா போடலாம் தான்..

குழந்தைகளுக்கு ஏன் பல் பிரச்னை!

ஆனால் பாருங்கள்.. நம் குழந்தைகளைக் கூட இந்தப் பல் சொத்தையும் பற்குழிகளும் விடுவதில்லை. பால் மட்டும் தானே கொடுக்கிறோம்? மித உணவுகள் தான் இரண்டு வயது வரை தருகிறோம்; பின்னரும் ஏன் என் பிள்ளைக்கு இப்படி பல் எல்லாம் கருப்பாக, ஓரங்கள் அரித்து.. ஏன் டாக்டர்? என்று கேட்காத பெற்றோரின் எண்ணிக்கை இன்று மிக மிகக் குறைவு!

காரணம் இதுதான்!

பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தையை அப்படியே மீண்டும் படுக்கையில் விட்டுவிட்டு வரும் நாம் தான் அங்கேயும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறோம். நல்ல சுத்தமான துணியால், குழந்தையின் ஈறுகளையும் புதிதாக முளைத்து வரும் பற்களையும் துடைத்துவிடுவது மிகவும் அவசியம். இதுவே ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில் finger brush கொண்டு நாம் பல் துலக்கி விடுவது அவசியம். கொஞ்சம் பெரிய பிள்ளையென்றால், 8 வயது வரை baby brush கொண்டு பல் துலக்கப் பழக்க வேண்டும். ஒரு பட்டாணி அளவு பற்பசை, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் போதும்... அழகான புன்னகைக்கு அஸ்திவாரம் போட...

ரூட் கேனால் இருக்க பல்லை ஏன் எடுக்கணும்?

இதையெல்லாம் தாண்டியும் பற்களில் பிரச்சனை ஏற்படுமாயின், பற்களை எடுக்காமலே root canal therapy மூலம், சிறந்த முறையில் தீர்வு காண முடியும். சிறு வயதில் ஏற்படும் ஒழுங்கற்ற பல் வரிசைக்காக வளரிளம் பருவத்திலேயே க்ளிப் போட்டு விட்டால் முக அமைப்பில் நாம் விரும்பத்தக்க மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்!

இந்தப் பழக்கங்கள் கூடவே கூடாது!

தவிர, விரல் சப்புதல், உதடு கடித்தல், நகம் கடித்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் பல் வரிசையும் அமைப்பும் கடுமையான முறையில் பாதிக்கப்படும். இது போன்ற பழக்கங்களைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்கற்ற வரிசையைச் சீர் செய்யவும் உடனுக்குடன் பல் மருத்துவரை அணுகுவது நல்லது. ஆண்டுக்கு இரு முறை பல் மருத்துவரிடம் ஒரு செக் அப் செய்து கொண்டால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பல் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், எளிதில் தீர்வு காணவும் முடியும்!

தவிர, விரல் சப்புதல், உதடு கடித்தல், நகம் கடித்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் பல் வரிசையும் அமைப்பும் கடுமையான முறையில் பாதிக்கப் படும். இது போன்ற பழக்கங்களைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்கற்ற வரிசையைச் சீர் செய்யவும் உடனுக்குடன் பல் மருத்துவரை அணுகுவது நல்லது. ஆண்டுக்கு இரு முறை பல் மருத்துவரிடம் ஒரு செக் அப் செய்து கொண்டால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பல் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், எளிதில் தீர்வு காணவும் முடியும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com