பீகாரில் 42.8% குழந்தைகளுக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு; கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை!

பீகாரில் 42.8% குழந்தைகளுக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு; கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை!
பீகாரில் 42.8% குழந்தைகளுக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு; கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை!
Published on

பீகாரில் 42.8% குழந்தைகளுக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே கூறியுள்ளார். மேலும் 6 மாதம் முதல் 5
வருடங்கள்வரை உள்ள குழந்தைகளில் 63.5% பேருக்கு ரத்தசோகை உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

பீகார் சட்டசபையில் செவ்வாய்க்கிழமை(பிப்.23)இந்த தரவுகளை சமர்பித்துள்ளார் மங்கள் பாண்டே. தேசிய குடும்ப மற்றும் சுகாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 18
வயதுக்கு கீழுள்ள 1.22 கோடி குழந்தைகளிடம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டதிலிருந்து இந்த தரவுகள் பெறப்பட்டதாக அவர் கூறினார். ஊட்டச்சத்து
குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 42% குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

41% குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்கு ஏற்ற எடை இல்லை எனவும், அதேசமயத்தில் 2.40% குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

6 மாதத்திலிருந்து 5 வருடங்கள்வரை 63.5% குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு வாரத்திற்கு இரண்டுமுறை இரும்புச்சத்து டானிக் கொடுக்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்புழுக்களை அழிக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.

அதேபோல் பீகாரில் 58% கர்ப்பிணிகளுக்கும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது தரவுகளில் தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் காலி
பணியிடங்கள் உள்ளதாகவும், அதை நிரப்பும் முயற்சி நடந்துவருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் பிரேம் சந்திரா மிஸ்ரா, கடந்த இரண்டு பத்தாண்டுகளில் மாநிலத்திலுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு
மற்றும் ரத்தசோகையின் தாக்கம் அதிகம் உள்ளதாகவும், சுகாதாரத்துறை திறம்பட செயல்படவில்லை எனவும் விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com