‘வாட்ஸ்அப் நர்ஸ் அக்காக்கு விருது..’- மருத்துவப் பணியை ‘ஸ்மார்ட்’டாக செய்யும் செவிலியர் ஜெயலட்சுமி!

தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் சார்பில் வழங்கப்படும் சிறந்த செவிலியர் விருதுக்கு தேர்வாகி உள்ளார் செவிலியர் ஜெயலட்சுமி.
Nurse Jayalakshmi
Nurse Jayalakshmipt desk
Published on

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

செவிலியர்களின் முன்னோடியாக விளங்குபவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். கைவிளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்படும் இவரது பிறந்த தினமான மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சிறந்த செவிலியர் விருது (தமிழ்நாடு அளவில்)

இந்த ஆண்டு உலக செவிலியர்கள் நாளையொட்டி தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் சார்பில், சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் கிராம சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி சிறந்த செவிலியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர், தன் மருத்துவப் பணியினை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், செய்து வருகிறார். இதனால் எப்போதும் நோயாளிகளுடன் தொடர்பிலிருந்து சேவையாற்றி வருகிறார்.

Jayalakshmi
Jayalakshmi pt desk

யார் இந்த செவிலியர் ஜெயலட்சுமி? இவரின் சிறப்புகள் என்னென்ன?

சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதில், தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு முக்கியமானது. அதில் கைதேர்ந்தவர் செவிலியர் ஜெயலட்சுமி. கடந்த 3 ஆண்டுகளாக தாய் - சேய் நல வாட்ஸ்அப் குழுவொன்றை தொடங்கி, அதன் மூலம் கருவுற்றோருக்கு கர்ப்பம் பற்றிய நலக்கல்வி மற்றும் விழிப்புணர்வை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறாராம் இவர்.

மேலும் இந்தக் குழுவின் மூலம் தன் பகுதியில் உள்ள கர்ப்பிணிகளின் வாட்ஸ்அப் எண்களைச் சேகரித்து, அவர்களுக்கு தடுப்பூசி போடும் தேதி, நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை அனுப்பி ஒழுங்குப்படுத்தி கண்காணிக்கிறார் ஜெயலட்சுமி.

Jayalakshmi
Jayalakshmipt desk

இவர் பணிபுரியும் சுகாதார நிலைய பகுதிகளில் பெண்களிடையே ‘தன் சுத்தம் மற்றும் ஊட்டச்சத்து’ குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக கருவுற்ற தாய்மார்களிடையே பேறுகால முன் பராமரிப்பு மற்றும் சுகப் பிரசவத்திற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவர் ஆற்றிவரும் பணி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் இந்த செவிலியர் எடுத்துக் கொள்ளும் தனி கவனத்தை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஒருசில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இவருடைய சிறப்பான பணிகளை அங்கீகரித்து பாராட்டி விருதும் வழங்கியுள்ளன. அவர் பகுதி பொதுமக்கள் அவரை ‘செவிலியர் அம்மா, ஜெயா அக்கா’ என்றெல்லாம் அன்புடன் அழைக்கின்றனர். ஸ்மார்ட் செவிலியரான இவரின் சேவையைக்கூறி அவர்கள் எல்லோரும் நெகிழ்ச்சியும் அடைகின்றனர்.

medical camp
medical camppt desk

அதோடு சுகாதாரம் தொடர்பான பல்வேறு வீடியோக்கள், ஊட்டச்சத்து செய்திகள், இயல்பான பிரசவத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் யோகா பயிற்சிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், RCHID அட்டை மற்றும் அதன் முக்கியத்துவம் போன்றவற்றை வீடியோவாக வெளியிட்டு நோயாளிகள் மற்றும், கர்ப்பிணி தாய்மார்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை உண்டாக்கி ஊக்கப்படுத்தியும் வருகிறார் அவர்.

அப்படியான இவருக்கு சிறந்த செவியலருக்கான மற்றுமொரு விருது கிடைத்திருப்பது தங்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Jayalakshmi
Jayalakshmipt desk

இந்த விருதை பெற உள்ளதைக் குறித்து செவிலியர் நம்மிடையே கூறுகையில், “இந்த விருதை பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரதிபலன் பாராமல் உழைத்ததற்கு கிடைத்த பரிசாகவே இதை கருதுகிறேன். கொரோனா காலத்தில் கர்ப்பிணிகள் மட்டுமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் இருந்த பிறர் என அனைவருக்கும் நான் நேரடியாக மருத்துவ உதவிகளை வழங்கியதற்கு கிடைத்த அங்கீகாரம் இதுவென நினைக்கிறேன். பெருமையாக உள்ளது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com