தற்போதுள்ள சூழலில், தலைமுடியை நிளமாக வைத்துக்கொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை.
அதுமட்டுமல்ல, தலைமுடியை சரியாக பராமரிக்காமல் விட்டு விடுவதால், இறுதியில் முடி உதிர்தல், அடர்த்தி குறைதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். எனவே, அடர்த்தியாக இல்லாத தலைமுடியை அடர்த்தியாக காட்டுவதற்கு செய்யப்படும் ஒரு செயல்முறைதான் backcombing .
சிறு சிறு பார்ட்டிஷன்களாக முடியை பிரித்து, சீப்பின் உதவிக்கொண்டு மேலிருந்து கீழாக முடியை சீவுவதைதான் backcombing என்று கூறுகிறோம். இது பெரும்பாலாக தலையின் முன்பகுதியில் அலங்காரம் செய்வதற்கும், பின்புறம் அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை 1980 களில் பிரபலங்களின் சிகை அலங்காரமாகவே இருக்கிறது.
ஆனால், இந்த backcombing முறை தலைமுடியின் மயிர்க்கால்களை சேதப்படுத்தி முடி உதிர்தலுக்கு வலிவகுக்குமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வகையான சிகை அலங்காரத்தின் மூலம், hair cuticle (முடியின் மேற்பரப்பு) விலகி, முடிக்கு அதிக அடர்த்தியை கொடுக்கும் பட்சத்தில், இது முடியை சேதப்படுத்தி முடி கொட்டுதலை ஏற்படுத்துகிறது. இச்செயல்முறை, முடியில் முடிச்சுகளை உண்டாக்கி, முடி உடைதலுக்கு வலிவகுக்கிறது.
மேலும், இதன்பின்னர் முடி மீண்டும் பழைய நிலையை அடைவதில்லை..மாறாக, split ends உருவாக இதுவே காரணமாக அமைகிறது.
புதிதாக முடி வளரும் வரை இந்த பாதிப்பு சரியாவதில்லை.
இது traction alopecia (இழுவை அலோபீசியாவை) உண்டாகும். இழுவை அலோபீசியா என்பது backcombing செய்யப்படும்போது, மயிர்க்கால்கள் அதிகளவு இழுக்கப்படுவதால் .. இது மயிர்க்கால்களை பலவீனமடைய செய்து முடி உதிர்தலை ஏற்படுகிறது. இத்தகைய முடி உதிர்தலை இழுவை அலோபீசியா எனப்படும்.
முடியை இழுக்க முயற்சிக்காமல் எப்படி backcombing செய்ய வேண்டும் என்பதை சரியான வழிக்காட்டுதலுடன் அறிந்து செய்யவேண்டும்.
சுத்தமான சீப்பை பயன்படுத்த வேண்டும்.
சிறிய சிறிய பகுதிகளாக எடுத்து, மெல்லிய சீப்பை கொண்டு backcombing செய்து, சீப்பை வெளியே எடுப்பதற்கு முன்பு சீப்பு முடியின் கீழ்ப்பகுதியை அடைந்துவிட்டதாக என்று உறுதி செய்து கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் முடியின் மேலிருந்து தொடங்கலாம்.
தலைமுடியை இயல்பு நிலைக்கு கொண்டுவர, soft brush களை பயன்படுத்துங்கள்.
deep conditioning mask ஐ பயன்படுத்தி அகற்றுங்கள்.
crimpers , voluminizing போன்றவற்றை பயன்படுத்தலாம்.. இப்படி, முடியை அயன் செய்யும்போது, heat protection spray களை பயன்படுத்தவேண்டும்.. முக்கியமாக, அடிக்கடி செய்வதை அறவே தவிர்ப்பது நல்லது.
தீங்கு விளைவிக்காத சீரம் பயன்படுத்துங்கள்.
புரோட்டீன் மற்றும் ஊட்டசத்து நிறைந்த உணவுமுறைகளை பின்பற்றுங்கள்.
முக்கியமாக, உடல் நல சார்ந்த எந்த வொரு விஷயங்களை செய்வதற்கு முன்பு.. தகுந்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது கட்டாயம்.