உலக தாய்ப்பால் வாரம் | தாய்ப்பால் கட்டுதலை தவிர்க்க பாலூட்டும் அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும்?

தாய்ப்பால் கட்டுதல் என்றால் என்ன, எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், எப்படி கூடாது, தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையின் உடலும் தலையும் நேராக இருக்க வேண்டுமா... போன்ற பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் பாலூட்டுதல் நிபுணர் (IBCLC) டீனா அபிஷேக்.
தாய்ப்பால்
தாய்ப்பால்PT Web
Published on

தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் வண்ணம் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1- 7 வரை ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில், தாய்ப்பால் தொடர்பாக உள்ள சில சந்தேகங்களுக்கு நமக்கு விளக்கம் அளிக்கிறார் பாலூட்டுதல் நிபுணர் (IBCLC) டீனா அபிஷேக்.

பாலூட்டுதல் நிபுணர் (IBCLC) டீனா அபிஷேக்.
பாலூட்டுதல் நிபுணர் (IBCLC) டீனா அபிஷேக்.

தாய்ப்பால் கட்டுதல் என்றால் என்ன? அது ஏற்படாமல் இருக்க தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்?

தாய்ப்பால் கட்டுதல் (Engorgement) என்பது தாயின் மார்பகங்களில் மிக அதிகமாக பால் நிரம்புவதால் ஏற்படும் ஒரு பிரச்னை. இது பெரும்பாலும் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் நாட்களில் அம்மாக்களுக்கு உண்டாகலாம். இதனால் அவர்களின் மார்பகங்கள் கடினமாக, வீங்கியதாக மாறும். வலி ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

தாய்ப்பால்
தாய்ப்பால் வாரம்| தாய்ப்பால் குறித்து மருத்துவர் தரும் A - Z தகவல்கள்

தாய்ப்பால் கட்டுதல் ஏற்படாமல் இருக்க....

  • குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்தால், மார்பகங்களை பால் சேர்ந்துவிடா நிலையில் வைத்திருக்க முடியும். ஆகவே பால் கட்டாது.

தாய்ப்பால்
தாய்ப்பால்
  • தாய்ப்பால் சேர்வதை தவிர்க்க முடியவில்லை / அதிக பால் சுரப்பது போல உள்ளது எனும்பட்சத்தில், அந்தப் பாலை Breast Pump போன்றவற்றின் உதவியோடு நீக்கிவிட வேண்டும். மார்பகத்தில் அதை சேரவிடக்கூடாது. அதிக பால் சுரப்பவர்கள், தாய்ப்பால் தானம் மூலம் அவற்றை தானமளித்து, பிற குழந்தைகள் பயன்பெறவும் உதவவும்.

  • வெப்பம் (warm compress) அல்லது குளிர் பொத்தி குளிர் பொத்தியை (cold compress) மூலம் மார்பகங்களில் லேசான வெப்பம் / குளிர்ச்சியை ஒருநாளில் அவ்வபோது வைப்பது. இதனால் மார்பகம் கடினமாவது தவிர்க்கப்படும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றுவதால், தாய்ப்பால் கட்டுதல் ஏற்படாமல் தடுக்கலாம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் அனுபவத்தை சீராக வைத்துக்கொள்ளலாம்.

எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? எப்படி கூடாது (Positions)?

தாய்ப்பால் கொடுக்கும் போது, தாய்மார்கள் சரியான பொசிஷனில் இருந்து குழந்தைகளுக்கு பால் கொடுப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அப்போதுதான் தாய்க்கு வலியின்றி பால் கொடுக்கவும், குழந்தைக்கும் நன்கு பால் குடிக்கவும் முடியும்.

சில முக்கியமான பொசிஷன்கள் மற்றும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் இதோ...

தாய்ப்பால்
உலக தாய்ப்பால் வாரம் | “குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையாது” – நடிகை சரண்யா

கிராஸில் க்ரேடில் நிலை (Cradle Hold):

  • குழந்தையை மார்பகத்திற்கு பக்கவாட்டில் வைத்து, தாய் தன் கைகளால் குழந்தையை தூக்கிப் பிடிக்க வேண்டும்.

  • பின் தாய் தன் பத்து விரல்களால் குழந்தையின் தலையை நன்கு பிடித்துக்கொள்ள வேண்டும். பின்னரே பால் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால்
தாய்ப்பால்

கிராஸில் க்ரேடில் நிலை (Cross Cradle Hold):

  • குழந்தையை மாறி மாறி மார்பகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • குழந்தையின் தலை, கழுத்து மற்றும் முதுகு ஆகியவை தாயின் கைகளால் நன்றாக பிடிக்கப்பட்டு, பால் கொடுக்கப்பட வேண்டும்

தாய்ப்பால்
ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை... குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்!

பைபல் ஹோல்ட் (Football Hold):

  • குழந்தையை தாய் தன் பக்கவாட்டில், கைகளில் தூக்கிப் பிடிக்க வேண்டும்.

  • குழந்தையின் தலை மற்றும் கழுத்து தாயின் கரங்களால் நன்றாக பிடிக்கப்பட வேண்டும்.

தாய்ப்பால்  கொடுக்கும் முறை (Breastfeeding Positions)
தாய்ப்பால் கொடுக்கும் முறை (Breastfeeding Positions)

லை டவுன் ஹோல்ட் (Side-Lying Hold):

  • தாயும் குழந்தையும் படுத்த நிலையில் இருந்தால், தாயின் மார்பகமானது குழந்தையின் முகமாய் இருக்க வேண்டும்.

  • இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கும் போது இப்படி கொடுப்பது உகந்தது.

எப்படி கூடாது (Positions to Avoid)

·  குழந்தையின் கழுத்து மற்றும் முதுகு நேராக இருக்காமல் சாய்ந்து இருப்பது தவறு. அப்படி பிடித்தபடி பால் கொடுக்கக்கூடாது.

·  குழந்தையின் மூக்கு மூடப்பட்டிருப்பது: குழந்தையின் மூக்கு மார்பகத்தில் மூடப்படாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும்.

·  குழந்தையின் காது, தோள் மற்றும் இடுப்பு சீராக இல்லாமல் இருப்பது: இது குழந்தைக்கு பாரமாக இருக்கும் என்பதால், குழந்தையால் சரியாக பால் குடிக்க முடியாது.

தாய்ப்பால்  கொடுக்கும் முறை (Breastfeeding Positions)
தாய்ப்பால் கொடுக்கும் முறை (Breastfeeding Positions)

சரியாக தாய்ப்பால் கொடுக்கப்படாவிட்டால், குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுமா?

சரியாக தாய்ப்பால் கொடுக்கப்படாவிட்டால், குழந்தை முழுமையாக பால் குடிக்க முடியாமல், பசிக்கு உள்ளாகும். வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படலாம்.

தாய்ப்பால்
உலக தாய்ப்பால் வாரம் | தாய்ப்பால் மூலம் தாய், சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை எப்படி இருக்க வேண்டும்?

  • குழந்தையின் தலை மற்றும் உடல் நேராக இருக்க வேண்டும். தலை சாய்ந்து அல்லது மூடிய நிலையில் இருக்கக்கூடாது.

  • குழந்தையின் முழு உடலும் தாயின் பக்கவாட்டில் இருப்பது அவசியம். குறிப்பாக தாயின் மார்பகத்திற்கு நேராகவும், நெருக்கமாகவும் இருப்பது முக்கியம்.

தாய்ப்பால்
தாய்ப்பால்
  • குழந்தையின் மூக்கு மற்றும் மட்டு தாயின் மார்பகத்திற்கு எதிராக இருப்பது நல்லது. இதனால் பால் சிந்துதல் எளிதாக இருக்கும்.

இவற்றின் மூலம் தாய்க்கு எளிதாக பால் சுரப்பதும் நிகழும். தாயால் வலியின்றி பால் கொடுக்கும் சூழலை உருவாக்கி கொள்ள முடியும்.

தாய்ப்பால்
ஒரேநேரத்துல 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது சரியா? #TandemNursing பற்றி தெரிஞ்சுகோங்க அம்மாக்களே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com