அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் 16 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று மூளையை திண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. மைக்கேல் அலெக்சாண்டர் பொல்லாக் III என்ற அந்த ஆண் கன்ட்ரி கிளப் ஆஃப் லிட்டில் ராக் என்ற இடத்தில் உள்ள பூங்காவில் விளையாடிய போது இந்த அமீபா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில் குழந்தை செப்டம்பர் 4 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
குழந்தையின் இறப்பிற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக குழந்தை விளையாடிய அவ்விடத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரியானது சுகாதாரத் துறை, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் ஒரு மாதிரியில் அமீபாவின் தடயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொல்லாக் இந்த ஆண்டு அமீபாவால் இறந்த ஐந்தாவது அமெரிக்கர். இதன் காராணமாக வேறு யாருக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கன்ட்ரி கிளப் ஆஃப் லிட்டில் ராக்கில் இருந்த பூங்காவானது தானாக முன்வந்து அதன் குளம் மற்றும் ஸ்பிளாஸ் பேடை மூடிய நிலையில் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வகையான அமீபாக்கள், “மூளை திசிக்களை அழித்து, மூளையில் வீக்கத்தில் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியது என்று ஆர்கன்சாஸ்சின் சுகாதத்துறை வியாழக்கிழமை அன்று செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
CDC வெளியிட்ட அறிக்கையில் படி, இந்த வகை அமீபா மூக்கு வழியாக உடலில் நுழைகிறது. பொதுவாக மக்கள் நீச்சல், டைவிங் செய்யும் போது தங்களது தலையை நீருக்கடியில் கொண்டு செல்கின்றனர். இதன் மூலமாக தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து உயிரிகள் உடலினுள் நுழைய வாய்ப்பு ஏற்படுகின்றது.
இந்த வகை நோய் தொற்றை ஏற்படுத்தும் அமீபாக்களானது மண் மற்றும் சூடான நன்னீர் ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் வெந்நீர் ஊற்றுகளில் வாழும் ஒரு அமீபா வகையாகும். இவ்வகையான அமீபாக்களானது தண்ணீரில் போதுமான அளவு குளோரின் கலக்கப்படாத நிலையில் உருவாக காரணமாக அமைகிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றது.
நெக்லேரியா ஃபோலேரி தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. PAM இன் அறிகுறிகள் பொதுவாக நோய்த்தொற்றுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு தொடங்குகின்றன, ஆனால் CDC படி, அவை ஒன்று முதல் 12 நாட்களுக்குள் தொடங்கலாம்.
தலைவலி, காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தி போன்றவை சில அறிகுறிகளாகும். பிந்தையவற்றில் குழப்பம், கழுத்து இறுக்கம், சுற்றுப்புறங்கள் மற்றும் மக்கள் மீது கவனம் இல்லாமை, பிரமைகள் மற்றும் கோமா ஆகியவை அடங்கும். நோய் தொடங்கியவுடன், அது வேகமாக முற்றி பொதுவாக ஐந்து நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தை உள்ளடக்கியது.