ஆச்சரியத்தினை ஏற்படுத்திய மருத்துவ சிகிச்சை முறைகள்
ஆச்சரியத்தினை ஏற்படுத்திய மருத்துவ சிகிச்சை முறைகள்முகநூல்

Rewind 2023 | மருத்துவ உலகில் பலரையும் ஆச்சர்யத்துக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிய சிகிச்சைகள்!

2023-ல் மருத்துவ உலகில் மேற்கொள்ளப்பட்ட சில சிகிச்சை முறைகள், பலரையும் ஆச்சர்யத்துக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது. அதில் ஒரு சில சிகிச்சைகள் குறித்தும், அதனால் காப்பாற்றப்பட்ட உயிர்களை பற்றியும் இத்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

1. முழு கண் மாற்று அறுவை சிகிச்சை

2021 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 46 வயதான ஆரோன் ஜேம்ஸ் என்பவரை 7,200 வால்டேஜ் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் உடலின் பல பாகங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இருப்பினும் நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்தார். இருப்பினும் அவருக்கு இடது கண், இடது கையின் முழங்கைக்கு மேலுள்ள பகுதி, மூக்கு, உதடு, முன் பற்கள், இடதுபுற கன்னம் முற்றிலும் சேதமடைந்து முகத்தின் அரைப்பகுதி முழுவதும் பாதிப்புக்குள்ளானது.

ஆரோன் ஜேம்ஸ்
ஆரோன் ஜேம்ஸ்

இந்நிலையில் அமெரிக்காவின் நியூர்யார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதல்முறையாக உயிரோடு இருக்கும் மனிதனுக்கு முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அளித்து எதிர்கால மருத்துவத்தின் மீது நம்பிக்கையை அளித்தனர் அந்நாட்டு மருத்துவர்கள்.

2. DD மார்பக அறுவை சிகிச்சை

ஐக்கிய அமெரிக்காவின் செயின்ட் லூயி என்னும் பகுதியில் வாழ்ந்தவர் 34 வயது நிரம்பிய டேவி பாயர். இவர் தனது 21 வயதில் இருந்தே ஒரு நாளைக்கு 1 சிகரெட் என்று தொடர்ந்து புகைத்து வந்துள்ளார்.

 டேவி பாயர்
டேவி பாயர்

இதில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவருக்கு எடுக்கப்பட்ட x ray-யில், 2 நுரையீரல்களும் முழுவதுமாக சீல் நிரம்பி காணப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நுரையீரல் அறுவை சிகிச்சை செய்தாலும்கூட அதை தாங்குவதற்கான வலிமை அவருக்கு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நம்பிக்கையோடு அச்சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர் மருத்துவர்கள். அதன்படி DD மார்பக அறுவை சிகிச்சை மூலம் அவரது உயிரையே காப்பாற்றி பெரும் ஆச்சரியத்தினை நிகழ்த்தியுள்ளனர் மருத்துவர்கள்.

அதென்ன DD மார்பக அறுவை சிகிச்சை?

2 நுரையீரல்களையும் அகற்றிவிட்டு, மார்பு பகுதியில் 2 செயற்கை நுரையீரல்களை (எக்ஸ்ட்ரா கார்போரல் மெம்ப்ரேன் ஆக்சிஜனேற்றம் அல்லது ECMO) பொருத்துவர். பின் இதயத்தின் ஆக்சிஜன் பரிமாற்றம் சீர் செய்யப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு வெற்றிகரமாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, அவருடைய பாதிக்கப்பட்ட நுரையீரலில் அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும்.

3. இரண்டு வயது குழந்தைக்கு முதலுதவி

டெல்லி புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த பொழுது இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரண்டு வயது பெண் குழந்தைக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த விமானத்தில் பயணித்த மருத்துவர்கள் குழு, குழந்தைக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.

 எய்ம்ஸ்  மருத்துவர்கள் குழு
எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு

இந்த சம்பவத்தினை எய்ம்ஸ் மருத்துவமனை தனது எக்ஸ் வலைத்தள பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்தது.

4. 110 வயது மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தினை சேர்ந்த மூதாட்டி பாத்திமா. இவருக்கு வயது 110. ஒரு நாள் எதிர்ப்பாராத விதமாக வீட்டுக்குள் தவறி விழுந்த மூதாட்டிக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டு இடுப்பு எலும்பு முறிவடைந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கட்டாயம் அறுவை சிகிச்சை நிகழ்த்த வேண்டும் என மருத்துவர்கள் முடிவுசெய்யவே, Fascia iliaca என்ற சிகிச்சையின் மூலம் முதல் கட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கோப்பு காட்சி
கோப்பு காட்சி

இது மருத்துவத்தில் வலியை குறைக்க உதவும் ஒரு முறை. இந்த அதிநவீன தொழில்நுட்பம் 12 மணிநேரத்திற்கு முழுமையான வலி நிவாரணத்தை அளிக்கும். இம்முயற்சிக்கு பிறகு மூதாட்டிக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்களின் இந்த அசாதாரண முயற்சிக்கு மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்

ஆச்சரியத்தினை ஏற்படுத்திய மருத்துவ சிகிச்சை முறைகள்
கேரளா: 110 வயது மூதாட்டிக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து அசத்திய மருத்துவர்கள்!

5. VR (Virtual Reality), 3D படத்தின் உதவியுடன் புற்றுநோய் கட்டிகள் அகற்றம்

சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 மாத குழந்தைக்கு நடந்த ஆச்சரியமளிக்ககூடிய சம்பவம்தான் இது. இக்குழந்தையின் 2 சிறுநீரகமும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது. எந்தளவுக்கு என்றால், அந்த புற்று நோய்க்கட்டிகள் இரண்டு சிறுநீரகங்களையே மறைக்கூடிய அளவிற்கு பெரிதாக காணப்பட்டுள்ளன.

VR,3D படத்தின் உதவியுடன் புற்று நோய் கட்டிகள் அகற்றம்.
VR,3D படத்தின் உதவியுடன் புற்று நோய் கட்டிகள் அகற்றம்.

குழந்தைக்கு பொருந்தும் வகையில் சிறுநீரகம் கிடைப்பது அரிது. அதேநேரம் தொடர் டயாலிசிஸ் செய்வது / குழந்தையின் வளர்ச்சியை தாமதப்படுத்துவது போன்றவையும் பிரச்னைதான். ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால், கட்டிகளை அகற்ற முடிவுசெய்துள்ளது மருத்துவர் குழு. இதற்காக பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் vr எனப்படும் virtual reconstruction பின்பற்றி வெற்றிகரமாக அப்புற்றுநோய் கட்டிகளை அகற்றினர் மருத்துவர்கள்.

6. தடம் தெரியாமல் போன தையல் ஊசி

புது டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவர் மூக்கில் ரத்தக்கசிவு மற்றும் இருமலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கதிரியக்க சோதனை செய்து பார்த்ததில், வயிற்றில் தையல் ஊசி இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த தையல் ஊசியை வெளியேற்ற மருத்துவர்கள் கையாண்ட சிகிச்சை முறைதான் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

தையல் ஊசி
தையல் ஊசி

அது என்னவெனில், தையல் ஊசியை வெளியேற்ற 4.மி,மீ அகலம் மற்றும் 1.5 மி.மீ பருமன் கொண்ட காந்தம் வாங்கிவரப்பட்டுள்ளது. அத்துடன் காந்த நூலை பொருத்தி, ஒரே ஒரு தாடையுடன் கூடிய சிறப்பு கருவியை கொண்டு ஊசியை வெளியேற்ற திட்டமிடப்பட்டது.

மேலும் நுரையீரலில் ஊசி இருக்கும் இருப்பிடத்தை கண்டறிய எண்டோஸ்கோபிக் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு சுவாசக் குழாயின் வழியாக இக்காந்தமானது செலுத்தப்பட்டு சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com