90% பெயிண்ட் மாதிரிகளை ஆய்வு செய்ததில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

வீட்டிற்கு வர்ணம் பூசப்பயன்படுத்தபடும் பெயிண்ட்களில் ஈயத்தின் அளவு என்பது, இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் இருப்பதாக ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.
வர்ணம்
வர்ணம்முகநூல்
Published on

வீட்டிற்கு வர்ணம் பூசப்பயன்படுத்தபடும் பெயிண்ட்களில் ஈயத்தின் அளவு என்பது, இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் இருப்பதாக ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. இவை குழந்தைகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இதனால் ஏற்படக்கூடிய நச்சுத்தன்மை என்பது குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் NGO தெரிவித்துள்ளது.

லெட்
லெட் முகநூல்

டாக்ஸிக்ஸ் லிங்க் (Toxics Link) மற்றும் International Pollutants Elimination Network  (IPEN) ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கின்றன. இதில் IPEN என்பது 600 க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களை (NGO) உள்ளடக்கிய அமைப்பாகும்.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், இந்திய சந்தைகளில் கிடைக்ககூடைய 51 வர்ணங்களில் மத்திய அரசு பரிந்துரைத்த அளவைவிட அதிகமாக Lead (ஈயம்) எனும் உலோகம் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த 51 பெயிண்ட்கள் என்பது சிறு குறு நிறுவனங்களைச் சேர்ந்த (MSMIs) 40 பிராண்டுகளைச் சேர்ந்தவை. இவை நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு கடைகளின் மூலமும், ஆன்லைன் ஆர்டர்களின் மூலமும் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெயிண்ட்களில் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஈயத்தின் அளவு என்பது 90 parts per million (ppm) என்பதாகும். ஆனால் 76.4% பெயிண்ட்களில் இந்த அளவென்பது 111 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

சட்டம்:

2017 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த Regulation of Lead Contents in Household and Decorative Paints Rules, 2016, “90ppm க்கு மேல் ஈயம் அல்லது ஈய கலவைகள் கொண்ட வர்ணப்பூச்சுகளை தயாரித்து வர்த்தகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கிறது.

வர்ணம்
உ.பி: ரத்தப் பரிமாற்றத்தின் மூலம் ரத்தம் பெற்ற 14 குழந்தைகளுக்கு HIV, ஹெபடைட்டிஸ் பாதிப்பு

மேலும் 2007 ஆம் ஆண்டில் டாக்ஸிக்ஸ் லிங்க் அமைப்பு பெயிண்ட்களை ஆய்வு செய்யத் தொடங்கியபோது கூட முக்கிய பிராண்டுகளும் அளவுக்கு மீறிய ஈயத்தை உள்ளடக்கிய வர்ணங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அப்போதே அவைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் திருத்தம் செய்யப்பட்டது. நிலைமை அப்படியிருக்க, 2017 ஆம் ஆண்டி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும்கூட இதுபோன்ற செயல்கள் தொடர ஆரம்பித்திருக்கிறது.

டெல்லியை சேர்ந்த சுற்றுசூழல்ஆராய்ச்சி மற்றும் டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற அமைப்பின் இணை இயக்குநர் திரு. சதீஷ் சின்ஹா

இது குறித்து தெரிவிக்கையில், “ இந்த வரம்பு மீறிய ஈயத்தின் அளவு குழந்தைகளின் மூளையை பாதித்து நச்சுத்தன்மை விளைவிக்கக் கூடிய வாழ்நாள் முழுவதும் மீளமுடியாத பாதிப்பை அவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த பெயிண்ட் காலப்போக்கில் சிதைந்து கீழே விழும்போது அவற்றை குழந்தைகள் தொட்டு விளையாடுவது, எடுத்து உண்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும். அப்போது இதில் கலந்துள்ள ஈயத்தின் நச்சுத்தன்மை அவர்களை பாதிக்கிறதாக அமைகிறது” என்றுள்ளார்.

வர்ணம்
VR,3D படத்தின் உதவியுடன் 18மாத குழந்தையின் புற்றுநோய் கட்டிகள் அகற்றம்! சென்னை மருத்துவர்கள் அசத்தல்

மருத்துவர்கள் இதுகுறித்து விளக்குகையில், “ஈயம் அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் இருந்தால், அது உடலை வெவ்வேறு வழிகளில் பாதிக்கலாம். கால அளவைப் பொறுத்து ஈயம் ஹீமாட்டாலஜிக்கல் செல்கள், மூளை, சிறுநீரகம், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட பல்வேறு உறுப்பு அமைப்புகளை பாதிக்கலாம்.

இந்த லெட்ன் நச்சுத்தன்மை என்பது கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கும் மாற்றப்படலாம்” என்றெல்லாம் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com