சருமத்திற்கு வைட்டமின் சி தரும் 5 நன்மைகள்!

சருமத்திற்கு வைட்டமின் சி தரும் 5 நன்மைகள்!
சருமத்திற்கு வைட்டமின் சி தரும் 5 நன்மைகள்!
Published on

உடல் சரியாக இயங்க அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் அவசியம். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்போது அது உடனடியான பாதிப்பு மற்றும் நீண்டகால பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும். குறிப்பாக அந்த பாதிப்பு சருமத்தில் நன்கு வெளிப்படும். சருமத்தை பாதுகாப்பதில் வைட்டமின் சி முக்கியப்பங்கு வகிக்கிறது.

சருமத்திற்கு வைட்டமின் சி தரும் 5 நன்மைகள்

ஈரப்பதம்: சருமம் வறட்சியாக இல்லாமல் ஈரப்பதத்துடன் அதாவது நீரேற்றத்துடன் இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். சருமத்திற்கு இயற்கையான மாய்ஸரைசர் என்றால் அது வைட்டமின் சி என்று சொல்லலாம்.

பளபளப்பு: எந்த நிறமுடைய சருமமாக இருந்தாலும் பொலிவுடன் இருப்பதே ஓர் அழகுதரும். வைட்டமின் சி சருமத்திற்கு பளபளப்பையும், பிரகாசத்தையும் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் சரும நிறத்தையும் இயற்கையாகவே கூட்டுகிறது.

தன்மை: சருமத்திற்குத் தேவையான கொலாஜன் சுரப்பில் வைட்டமின் சி முக்கியப் பங்காற்றுகிறது. இது சருமம் தளர்ச்சியடைதல், கோடு மற்றும் சுருக்கங்கள் விழுதலை தடுக்கிறது.

நிறம்: சரும நிறத்தை இயற்கையாகவே அதிகரிக்கும் வைட்டமின் சி ஆனது, ஹைபர்பிக்மண்டேஷனை எதிர்த்து போராடி, சரும நிறத்தை கூட்டுகிறது. கருவளையங்களை குறைப்பதிலும் இதன் பங்கு அதிகம்.

சூரிய ஒளி: சூரிய ஒளியில் சருமம் அதிகம் பாதிக்கப்படும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். வைட்டமின் சி சூரிய கதிர்களிலிருந்து நம்மை பாதுகாப்பதுடன், அதிக வெப்பத்தால் ஏற்பட்ட காயங்களையும் குணமாக்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com