கேரளா | மேலும் 3 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி!

கேரளாவில் மேலும் 3 பேர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பா வைரஸ்
பா வைரஸ் முகநூல்
Published on

கேரளாவில் மேலும் 3 பேர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது.

நிபா வைரஸ்
நிபா வைரஸ்புதிய தலைமுறை

பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 28 பேர் பெரிந்தல்மன்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பா வைரஸ்
கேரளாவில் உறுதி செய்யப்பட்ட எம்.பாக்ஸ் வைரஸ் தொற்று: தீவிர கண்காணிப்பில் கன்னியாகுமரி!

நிபா அறிகுறியுடன் இருந்தவர்களோடு உடனிருந்தவர்கள் என இதுவரை 267 பேர் கண்டறியப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com