இன்று உலக தூக்க தினம்... நல்லா தூங்குங்க

இன்று உலக தூக்க தினம்... நல்லா தூங்குங்க
இன்று உலக தூக்க தினம்... நல்லா தூங்குங்க
Published on

தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று அழ்ந்த தூக்கமே மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். இன்றைய சூழலில் மக்கள் குறைவான நேரமே உறங்குகின்றனர். குறைவான நேரம் உறங்குவதும் தவறு நீண்ட நேரம் உறங்குவதும் நோயுற்று உடலுக்கு அறிகுறி. தூக்கத்தின் அவசியத்தை உணர்த்த இன்று சர்வதேச தூக்க தினம் கொண்டாடப்படுகிறது.

யார் யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

பிறந்த குழந்தைகள்: 14-17 மணி நேரம்

4-11 மாத குழந்தைகள் : 12-15 மணி நேரம்

1-2 வயது குழந்தைகள் : 11-14 மணி நேரம்

3-5 வயது வரை : 10-13 மணி நேரம்

6-13 வயது வரை : 9-11 மணி நேரம்

14-17 வயது வரை: 8-10 மணி நேரம்

18-25 வயது வரை: 7-9 மணி நேரம்

26 வயதுக்கு மேற்பட்டோர் : 7-8 மணி நேரம்

நிம்மதியாக தூங்க என்ன செய்யலாம்?

1. குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்ல வேண்டும்.

2. காஃபி போன்ற கேஃபைன் இருக்கும் உணவுப் பொருட்களை குறைத்தல்

3. டிவி, செல்ஃபோன், கணினியை அணைத்துவிடுதல்

4. இரவில் அதிகம் உணவை தவிர்த்தல்

5. சாப்பிடாமல் தூங்கக் கூடாது

6. தினசரி உடற்பயிற்சி

7. தூங்கும் முன் குளிர்பானம் குடிப்பதை தவித்தல்

8. அமைதியான, ஒளியில்லாத படுக்கை அறை

9. மெத்தை, தலையணை தேர்வில் கவனம்

10. அலாரம் உதவியின்றி தானே எழுதல்

உங்களால் அலாரம் இல்லாமல் எழுந்திரிக்க முடியவில்லையா?

விழித்த பின்னும் எழ முடியாமல் சிரமப்படுகிறீர்களா?

மதிய நேரங்களில் மந்தமாக இருக்கிறீர்களா?

அலுவலக பணிகளின்போது தூங்குகிறீர்களா?

டிவி பார்த்துக்கொண்டே உறங்கிவிடுகிறீர்களா?

அப்படி இருந்தால் உங்கள் உறக்கம் ஆரோக்கியமானதல்ல என்று அர்த்தம்.

தூக்கம் குறித்து பல்வேறு நம்பிக்கைகள் உள்ளது அவை அனைத்தும் உண்மையா? அறிவியல் பூர்வமான மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள். பாட்டு கேட்டால் தான் எனக்கு தூக்கமே வரும் என சொல்பவரா நீங்கள்? பாட்டு கேட்டால் தூக்கம் வருமா? பாட்டு தூக்கத்தை தூண்டுமா? பாதிக்குமா?

வயதானவர்களுக்கு குறைவான தூக்கமே தேவைப்படும் சொல்றாங்க ஆனால் உண்மை அது இல்ல தூங்குறதுக்கான முறை மாறுமே தவிர தூக்க அளவு எல்லாம் மாறாது. குறட்டை விடுறது ஒரு பொதுவான பிரச்சனை ஆனால் தீங்கானதல்லன்னு ஒரு கருத்து இருக்கு உண்மையில் குறட்டை, தூக்கத்தில் நமக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான அடையாளம். போதுமான தூக்கம் இல்லாததால் பகல் நேரத்துல தூக்கம் வருதுன்னு சொல்றது தப்பு அது துயில் மயக்க நோயின் (narcolepsy )அடையாளம். தூக்கத்தின் போது மூளை ஓய்வெடுப்பதாகக் கூறப்படுகிறது. அது உண்மையில்லை உடம்பு மட்டுமே ஓய்வெடுக்கும்.

இப்ப இருக்குற தலைமுறை எல்லாம் நைட் நான் டிவி பார்த்துகிட்டே தூங்குவேன் பாட்டு கேட்டா தான் எனக்கு தூக்கமே வரும் அப்படினு பெருமையா சொல்வாங்க. பாட்டு கேட்டா நிம்மதியான தூக்கம் எல்லாம் வராது அது உங்க தூக்கத்தை பாதிக்கும். இப்ப சொல்லுங்க இனிமே பாட்டு கேட்டுக்கிட்டே தூங்குவீங்களா..... குட் நைட்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com