ரத்தக்கோளாறான ஹீமோபிலியா காரணிகள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 17ஆம் தேதி உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்படுகிறது. ஹீமோபிலியா என்பது ரத்தம் தனது உறைதல் தன்மையை இழப்பதால் ரத்தப்போக்கு ஏற்படும் நிலை. பெரும்பாலும் இது பரம்பரை பிரச்னை என்றாலும், காயம் அல்லது அறுவைசிகிச்சைக்கு பிறகு தன்னிச்சையான ரத்தப்போக்குக்கு வழிவகுக்கிறது. ரத்தம் உறைதலுக்கு உதவும் புரதச்சத்து, குறைபடுவது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஒரு காயம் ஏற்படும்போது ரத்தம் எப்போது தனது இயற்கையான உறைதல் தன்மையை இழக்கிறதோ அப்போது ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதனால் அதீத ரத்தம் வெளியேறுவதுடன், உயிருக்கே ஊறு விளைவிப்பதாக அமைகிறது. முறையாக சிகிச்சையளிக்காவிட்டால் நோயாளிகளுக்கு அனீமியா பிரச்னை ஏற்பட வழிவகுக்கிறது. சிறு காயங்கள் ஹீமோபிலியா பிரச்னையை பெரிதளவில் ஏற்படுத்தாது என கூறுகின்றனர் மருத்துவர்கள். அதேசமயம் முழங்கை, முழங்கால் மற்றும் கணுக்கள் போன்ற இடங்களில் ஏற்படும் உள் ரத்தப்போக்கானது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர். இது திசுக்கள், உறுப்புகள் போன்றவற்றை சேதப்படுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
ரத்த உறைதலின் அளவைப்பொறுத்து ஹீமோபிலியாவின் அறிகுறிகள் மாறுபடும் என்கின்றனர் மருத்துவர்கள். உறைதல் பிரச்னை மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில், ரத்தப்போக்கானது அடி அல்லது அறுவைசிகிச்சைக்கு பிறகு ஏற்படும். அதுவே பிரச்னை தீவிரமாக இருக்கும் பட்சத்தில் சிறு காரணிகாள்கூட ரத்தப்போக்குக்கு வழிவகுக்கலாம். ஹீமோபிலியாவின் சில அறிகுறிகள்!
1. தடுப்பூசிக்குப் பிறகு அசாதாரணமான ரத்தப்போக்கு
2. சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் கலந்து வருதல்
3. நிறைய பெரிய அல்லது ஆழமான காயங்கள்
4. பிறந்த குழந்தைகளிடையே விளக்கமுடியாத எரிச்சல் உணர்வு
5. மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் அல்லது இறுக்கம்
6. பல் சிகிச்சை அல்லது அறுவைசிகிச்சைக்கு பிறகு காயங்களிலிருந்து விளக்கமுடியாத அதீத ரத்தப்போக்கு
7. விளக்கமுடியாத மூக்கு ரத்தப்போக்கு
சிலநேரங்களில் அரிதாக மூளையில் ரத்தப்போக்கு ஏற்படும். ஹீமோபிலியா நோயாளிகளுக்கு ஒரு சிறு வீக்கம் கூட மூளைகளில் ரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். இது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
1. தூக்கமின்மை
2. சோம்பல்
3. இரண்டாக தெரிதல்
4. தொடர் வாந்தி
5. தொடர் தலைவலி
6. வலிப்பு
7. வலிப்புத்தாக்கங்கள்
8. திடீர் பலவீனம்
9. விகாரத்தன்மை (Clumsiness)
ஹீமோபிலியா அனைவருக்கும் பரம்பரை பிரச்னையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சிலருக்கு கீழ்க்கண்ட பிரச்னைகளாலும் ஹீமோபிலியா ஏற்படலாம்.
1. கேன்சர்
2. தன்னுடல் எதிர்ப்பு பிரச்னை
3. கர்ப்பம்
4. மருந்துகளின் எதிர்வினை
5. பலதரப்பட்ட ஸ்க்லரோசிஸ்