பிரதமர் புகழாரம் -இனியேனும் மீண்டெழுமா தஞ்சை தலையாட்டி பொம்மை?

பிரதமர் புகழாரம் -இனியேனும் மீண்டெழுமா தஞ்சை தலையாட்டி பொம்மை?
பிரதமர் புகழாரம்  -இனியேனும் மீண்டெழுமா தஞ்சை தலையாட்டி பொம்மை?
Published on

கொரோனா ஊரடங்கால் 6 மாதமாக வருமானமின்றி தவித்துவரும் தலையாட்டி பொம்மை உற்பத்தியாளர்கள், தற்போது தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டதாலும், பிரதமர் மோடி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பற்றி மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாலும் இத்தொழிலுக்கு விடிவு காலம் பிறக்குமா என மீண்டும் உற்பத்தியை தொடங்கி உள்ளனர்.

தஞ்சாவூர் என்றாலே பெரியகோவிலுக்கு அடுத்து நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மைகள் தான். தஞ்சையின் வரலாற்றுச் சுவடுகளில் இதுவும் ஒன்றாகவும், வாழ்வியலை விளக்குவதாகவும் உள்ள தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் தஞ்சையின் கலைப் பண்பாட்டுச் சின்னமாக திகழ்கிறது, இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்து மேலும் மேலும் கீழே செல்லும் நிலைக்குப் போனாலும் அத்தனையும் தன்னம்பிக்கை என்ற அருமருந்து இருந்தால் மீண்டும் எழுந்து விட முடியும் என்பதைத் தான் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உணர்த்துகின்றன. இதனை குழந்தை பருவத்தில் இருந்து சொல்லி கொடுத்து வளர்த்தால் அவர்கள் வாழ்வில் எந்த பிரச்சிகை வந்தாலும் அதனை தீர்க்க அவர்களுக்கு மனதைரியம் பிறக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் தஞ்சை தலையாட்டி பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.

மீண்டெழும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்:

 “இப்படி பல்வேறு சிறப்புகள், வாழ்க்கையின் தத்துவங்களை எடுத்து சொல்லும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை ஆரம்பத்தில் 1000 குடும்பங்கள் தங்களது குல தொழிலாக செய்து வந்தனர். நாளடைவில் பொம்மைகளை செய்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே சென்றது. தற்போது 10 குடும்பங்கள் மட்டுமே தலையாட்டி பொம்மைகளை தயார் செய்து வருகிறோம்.

ஆனால் கொரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக தயார் செய்த பொம்மைகளை விற்க முடியாமலும் வாங்குவதற்கும் ஆட்கள் இல்லாமலும். வருமானம் இன்றிகடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இப்போது பாரத பிரதமர் மன் கி பாத் நிகழ்ச்சியில் தலையாட்டி பொம்மையின் பெருமை பற்றியும் தஞ்சை பொம்மைகளின் சிறப்பு பற்றியும் பேசி உள்ளார் மேலும் தற்போது தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன இனியாவது விடிவு காலம் பிறக்குமா என்ற ஏக்கத்தில்தான் மீண்டும் பொம்மை உற்பத்தியை தொடங்கியுள்ளோம்” என்கிறார் தஞ்சை தலையாட்டி பொம்மை உற்பத்தியாளர் பூபதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com