கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் ?

கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் ?
கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் ?
Published on

கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தவிரவிட்டுள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக பரபரப்பாக இருந்த கர்நாடகாவின் அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்குமா அல்லது தோற்றுப்போகுமா என்ற கேள்வி இந்தியளவில் எழுந்துள்ளது. மேலும் காங்கிரஸ் - மஜக கூட்டணி பெரும்பான்மை காட்டி குமாரசாமி தலைமையில் ஆட்சி அமையுமா என்ற பலவிதமான கேள்விகள் எழுந்துள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பாவை, ஆட்சி அமைக்குமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பா பதவி ஏற்க எதிர்ப்புத் எதிர்த்து 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருக்கும் மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. விடிய விடிய 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து, எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என அறிவித்தது. மேலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது.


அதில் ’காங்கிரஸ், மஜத  பெரும்பான்மை இருக்கிறது என்று கூறிய நிலையில் பாரதிய ஜனதாவை மட்டும் ஆட்சி அமைக்க அழைத்தது ஏன் என்று கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. மூத்த உறுப்பினர் ஒருவரை தாற்காலிக சபாநாயகராக நியமித்து வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

அடுத்தது என்ன ?

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். அதற்கு முதலில் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி காங்கிரஸ் கட்சியின் ஆர்.வி.தேஷ்பாண்டே மற்றும் பாஜகவின் மற்றும் பாஜகவின் விஸ்வநாத் கட்டி ஆகியோரின் பெயர்களை சட்டமன்ற செயலகம் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் ஒருவரை ஆளுநர் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்து அறிவிப்பார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே , ஹாலியால் தொகுதியில் இருந்து இவர் 8 முறை சட்டப்பேரவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் கட்டி 7முறை எம்.எல்.ஏ ஆனவர்.

தற்போது சட்டப்பேரவையில் இவர்தான் மிகவும் அனுபவமிக்க நபர் தேஷ்பாண்டே என்பதால் இவர் பெயரை இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால சபாநாயகரை பொறுத்தவரை சபாநாயகருக்கு இருக்கும் எல்லா அதிகாரமும் இருக்காது குறைவாகத்தான் இருக்கும், எம்எல்ஏக்கள் பதவி ஏற்க மட்டுமே இவர் பயன்படுத்தப்படுவார். அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கவும் நடக்கும் வாக்கெடுப்பை இவர் நடத்துவார். வாக்கெடுப்பு சமயத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் சமநிலையில் இருக்கும் போது, இவர் வாக்களிக்கலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com