மாமன்னன் திரைப்படத்தில் காண்பிக்கப்படும் கிராம தெய்வத்தின் பின்னணி என்ன? எதற்காக வழிபடப்படுகிறது?

மாமன்னன் திரைப்படத்தில் காண்பிக்கப்படும் கிராம தெய்வத்தின் பின்னணி என்ன? எதற்காக வழிபடப்படுகிறது? என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
மாமன்னன்
மாமன்னன்ட்விட்டர்
Published on

பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த பாளையக்காரர் கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இந்த இடைப்பட்ட வருடங்களில் கும்பனி படைக்கு எதிராக பாஞ்சாலங்குறிச்சியை பாதுகாக்க ஊமைத்துரையுடன் இணைந்து பலர் போர் செய்தனர். இதில் சிலரின் தியாகங்கள் மக்கள் தெரிந்துக்கொள்ளும் பொருட்டு முதன்மைப்படுத்தபட்டிருந்தாலும், சிலரின் தியாகத்தை அடியோடு மறைத்து விட்டதன் காரணம் என்ன?

kattabomman
kattabommanpt desk

மாமன்னன் திரைப்படத்தில் காண்பிக்கப்படும் கிராம தெய்வத்தின் பின்னணி என்ன? அத்தெய்வம் எதற்காக வழிபடப்படுகிறது? என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்து வந்த சமயம் இவரது படையில் தனதிகாரியாக சுப்பிரமணியம் (பிள்ளை), தளபதியாக வெள்ளையத்தேவன் (தேவர்), தளபதி சுந்தரலிங்கம் பள்ளர் (தேவேந்திரகுல வெள்ளாளர்) இவர்களை தவிர பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை இவர்கள் நால்வரும் அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள். இதில் சுந்தரலிங்கம் ஆங்கிலேயருக்கு எதிராக தனது முறைப்பெண்ணுடன் ஆடுமேய்பவர்கள் போல் வேடமணிந்து ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் தீ வைத்ததில் வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியது

இதில் சுந்தரலிங்கம் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தி பல வரலாறு நூல்களில் சிறு சிறு இடத்தில் தெரியவருகிறது. ஆனால் அரண்மனை வேலையாளராக மேலும் மன்னருடன் அனைத்து இடங்களுக்கும் செல்பவர்களான பொட்டி, முத்தன், கந்தன் மற்றும் தாமன் இவர்களின் வரலாறு எந்த சரித்திரத்திலும் இடம்பெறவில்லை என்பது வேதனை அளிக்கும் செய்தியாகும்.

இப்போது, மாமன்னன் படத்தில் காட்டப்பட்டிருக்கும் பொட்டிப்பகடையை பற்றிய வரலாறை அறிவோம்.

மாமன்னன் போஸ்டர்
மாமன்னன் போஸ்டர்

கட்டபொம்மனின் முக்கியமான 4 பாளையங்களுக்கு தலைவர்கள் தான் இந்த பொட்டிபகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை மற்றும் தாமன் பகடை. இதில் கந்தன், தாமன் இருவரும் கும்பனி படைகளுடன் போரிடும் சமயம் இறந்து விட பொட்டிப் பகடையும், முத்தன் பகடையும் கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையுடன் இணைந்து கும்பனி படைகளை எதிர்த்து வந்தனர். இதில் எட்டப்பன், கட்டபொம்மனை கும்பனி படையினருக்கு காட்டிக்கொடுக்க, ஆங்கிலேயர் கட்டபொம்மனை சிறை பிடிக்கின்றனர். அச்சமயம், ஊமைத்துரையும் பொட்டி பகடையும் முத்தான் பகடையும் கன்னிவாடி காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர்.

மாமன்னன்
Maamannan | சபாநாயகர் பதவி, சிதம்பரம் தொகுதி குறியீடு... மாமன்னன் பேசும் அரசியல் என்ன?

இந்த சமயத்தில் கட்டபொம்மன், தனது தம்பியான ஊமைத்துரையை பார்க்கவேண்டும் என்று விரும்பியதால், ஊமைத்துரை அண்ணனை பார்க்க பாளையங்கோட்டைக்கு செல்கிறார். இச்செய்தியை தெரிந்துக்கொண்ட கும்பனி படைகள், ஊமைத்துரையை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறார்கள். சிறையில் ஊமைத்துரைக்கு உதவுவதற்காக பொட்டி பகடை நியமிக்கப்படுகிறார். சிறைக்கு வெளியில் இருக்கும் புலிகுத்தி நாயக்கருக்கும், சிறையில் இருக்கும் ஊமைத்துரைக்கும் இடையில் செய்தி பரிமாற்றுபவராய் செயல்பட்டு ஊமைத்துறையின் திட்டத்திற்கு உதவிசெய்கிறார் பொட்டி பகடை.

மாமன்னன்
மாமன்னன்

ஊமைத்துரை தன் திட்டப்படி புலிகுத்தி, மற்றும் பொட்டி பகடையின் உதவியால் பாளையங்கோட்டை சிறையை தகர்க்கிறார். பின் அதிலிருந்து தப்பிய ஊமைத்துரை பாஞ்சாலக் குறிச்சியில் தனது அரசை நிறுவ நினைத்து, தனது மக்கள் அனைவரையும் ஒன்றாக கூட்டி ஒரு புதிய கோட்டையைக் கட்டுகிறார். அந்த கோட்டை எதிரிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் சில நவீன யுக்திகளை கொண்டு கட்டப்பட்டது. இதற்காக ஐந்து நாட்களில் 7,000 தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு, புதிய நுட்பங்களுடன் இந்த கோட்டையானது கட்டப்படுகிறது.

இதை தெரிந்துக்கொண்ட கும்பனி அரசு அங்கு வந்து கோட்டையை தகர்க்க முற்படுகிறது. இதில் பொட்டி பகடையும் குத்தன் பகடையும் வீரமரணம் அடைந்தனர். பிறகு அங்கிருந்து தப்பிய ஊமைத்துரை சிவகங்கை சென்று மருது சகோதரர்களின் உதவியை நாடினார் என்பது வரலாறு. இதில் பகடையின் வரலாறானது மறைக்கப்பட்டிருந்தாலும் இது போன்ற திரைப்படங்களால் பகடையைப்போன்ற தியாகிகள் இன்னமும் உயிர் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

மாமன்னன்
மாமன்னன் Twitter

மாமன்னனில் காட்டப்படும் காவல் தெய்வமான நான்கு தலைக்கொண்ட ஒரு தெய்வம் பகடை இனத்தவர்களாக இருக்கலாம். இவர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு இவர்களை ஊர் காவல் தெய்வமாக மக்கள் வணங்கி வருவதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com