2021 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வியாழக்கிழமை (நேற்று) வெளியாகின. அதுபோல 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கான 'எக்சிட் போல்' என்ன சொன்னது, அப்போது முடிவுகளில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு பார்வை...
2016 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் பெரும்பாலானவை திமுகவே வெற்றி பெறும் என்றே கூறின. ஆனால், அந்தக் கணிப்புகளை மீறி அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றது.
2016-க்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்:
இந்தியா டுடே -ஆக்சிஸ் கருத்துக் கணிப்பு
ஏபிபி – நீல்சன் கருத்துக்கணிப்பு
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி - சிவோட்டர் கருத்துக் கணிப்பு
நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு
நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு
ஆனால், இந்தக் கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக அதிமுக 135 இடங்களிலும், திமுக கூட்டணி 97 இடங்களிலும் வெற்றிபெற்றது. 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவே தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, சில சிறிய கட்சிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. மக்கள் நல கூட்டணியில் தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றன. இதுதவிர பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிட்டன.
தேர்தல் முடிவுகளின்படி அதிமுக 134 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதுபோல பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி போன்றவையும் ஓர் இடத்திலும் வெற்றிபெறவில்லை.
2021 க்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்:
சிவோட்டர்ஸ், ஏபிபி சேனல் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம்
தமிழகம் 234/234: (பெரும்பான்மைக்கு 118)
ரிபப்ளிக் சேனல், சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு:
இந்தியா அஹெட் கருத்துக் கணிப்பு
இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
டுடேஸ் கருத்துக் கணிப்பு
2021-க்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனங்கள் அனைத்துமே திமுக கூட்டணியே தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மே 2 ஆம் தேதி எல்லாவற்றுக்கும் விடை தெரியும்.
- வீரமணி சுந்தரசோழன்