விலங்குகளால் ஹிட்டான தமிழ்ப்படங்கள்

விலங்குகளால் ஹிட்டான தமிழ்ப்படங்கள்
விலங்குகளால் ஹிட்டான தமிழ்ப்படங்கள்
Published on

தமிழ்சினிமாவில் இப்போதுதான் மிருகங்கள் நடிப்பதற்கு ஏகப்பட்ட பிரச்னைகள்.. மெர்சல் படத்திற்கு கடைசியாக வந்த பிரச்னை அதுதான். ஆனால் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே ஏராளமான படங்களில் விலங்குகள் நடித்துள்ளன- அந்தப் படங்களில் நடித்த நடிகர்களை விட படத்தில் நடித்த மிருகங்களுக்கு தனி செல்வாக்கு இருந்தது. தேவர் பிலிம்ஸ் படங்களிலும் ராமநாராயணன் இயக்கத்தில் வந்த பல படங்களிலும் மிருகங்களே பெரும்பங்கு வகித்துள்ளன. இந்தியாவில் எல்லா மொழிகளிலும் ராமநாராயணனின் படங்கள் டப் செய்யப்பட்டு வசூலை வாரிக் குவித்தது. அதற்கு காரணம் விலங்குகள். ஹீரோவுக்கு உதவியாக, ஹீரோயினுக்கு துணையாக என பல பாத்திரங்களை ஏற்று மிருகங்கள் நடித்திருந்ததை மக்கள் மரியாதையோடு ஏற்றுக் கொண்டனர். மாயாஜாலக்கதை மன்னர் என்று அறியப்பட்ட விட்டாலாச்சார்யா படங்களிலும் மிருகங்கள் வந்து சென்றுள்ளன. 

விலங்குகளால் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான சில படங்களின் பட்டியல் இது:

1) நல்ல நேரம்: எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியானா படம். யானைகள்தான் கதையின் ஆதார ஸ்ருதி. ஆகட்டுன்டா தம்பி ராஜா என்று யானைகளை நடத்தியவாறு அப்போது எம்ஜிஆர் பாடிய பாடல் ஒரு மெகாஹிட் பாடல்.
2) அபூர்வசகோதரர்கள்: கமல் நடிப்பில் வந்த வெற்றிபடம். இதில் ஜெமினி சர்க்கஸ் மிருகங்கள் அதைத்தும் நடித்திருந்தன.
3) ஆட்டுக்கார அலமேலு: ஸ்ரீப்ரியாவுடன் ஆடு நடித்திருந்தால் அமோக வெற்றியடைந்தது. 
4) ஆடிவெள்ளி: யானை, குரங்கு, பாம்பு என பல மிருகங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது 
5) விருமாண்டி: கமல் நடிப்பில் வந்த படம். அதில் அபிராமி காளையை பிடித்தபடி கமலுடன் பேசும் வசனக்காட்சி பெரிதும் பேசப்பட்டது.
6) தாய் மீது சத்யம்: ரஜினி நடித்த இந்தப் படத்தில் வந்த நாய் அமோக வரவேற்பைப் பெற்றது.
7) பாட்ஷா: ரஜினி நடிப்பில் ப்ளாக்பாஸ்டர் வெற்றியை கொடுத்தப்படம். அதில் ரஜினி நாயுடன் வரும் காட்சி மிரட்டலாக இருந்தது.
8) கும்கி: விக்ரம் பிரபுக்கு ஹீரோ அந்தஸ்தை வழங்கிய படம்.
9) கருப்பன்: விஜய் சேதுபதி படம். இதில் ஜல்லிக்கடு காளை இடம் பெற்றது.
10) நாய்கள் ஜாக்கிரதை: சிபிராஜ் நடிப்பில் வந்த படம். அதில் நாய்தான் முக்கிய கதாப்பாத்திரம்.
11) சிங்கார வேலன்: கமல் இந்தப் படத்தில் ‘சென்னபடி கேளு மக்கர் பண்ணாதே’ என மாட்டுடன் பாட்டு பாடுவார்.
12) ராம் லக்ஷ்மண்: கமல் யானையுடன் நடித்த படம்
13) சிலம்பாட்டம்: சிம்பு காளையுடன் நடித்திருந்த படம்
14) அடிமை பெண்: எம்.ஜி.ஆர் இந்தப் படத்திற்காகவே ஒரு சிங்கத்தை வாங்கி பயன்படுத்தினார். பிறகு ஜூவில் வைத்து பராமரித்து வந்தார்.
16) கோவில்: சிம்பு நடித்த படம். இதில் வடிவேலுவை ஒவ்வொரு மிருகங்களும் விதவிதமான வழிகளில் வந்து பழி வாங்கும்.
17) நீயா?: பாம்பு பழி வாங்கும் படம். இந்தப் படத்தில் பெண்பாம்பாய் நடித்த ஸ்ரீபிரியா பாடிய ஒரே ஜீவன் ஒன்றே உள்ளாம் வாராய் கண்ணா பாடல் மிகப் பிரலம்.
18) மாட்டுக்கார வேலன்: எம்.ஜி.ஆர் படம். இதில் மாட்டுடன் எம்ஜிஆர் பாடிய சத்தியம் நீயே தர்மத்தாயே பாட்டு பிரபலமானது. 
19) ஆடுகளம்: தனுஷ் நடித்தது. சேவல் சண்டைதான் இந்தப் படத்தின் மையக்கரு. 
20) மாரி: தனுஷ் புறாக்களுடன் வாழ்ந்திருப்பார். புறாவை வைத்துதான் ஃபைட் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.
21) அன்னை ஓர் ஆலயம்: ரஜினி நடித்தது. யானையின் தாய்ப் பாசமே படத்தின் கதை. சிறுத்தையை தோள் மீது ரஜினி சுமந்து நிற்கும் இந்தப் படத்தின் போஸ்டர் அந்த காலத்து வைரல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com