கொரோனா வைரஸை வதந்தி என நினைத்து அஜாக்கிரதையாக இருந்த அமெரிக்க இளைஞர் கொரோனாவால் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர், ‘கோவிட்-19’ என்ற பெயரில் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கொரோனா வைரஸ் எல்லாம் வதந்தி என்றுகூறி அந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதை நம்பி டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் பங்கேற்றார். அத்துடன் தான் ஒரு இளைஞர் என்பதால் தன்னை கொரோனா வைரஸ் பாதிக்காது என்றும், அவ்வாறு கொரோனா தொற்று வந்தாலும் குணமடைந்துவிடுவோம் எனவும் நினைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் பெரிதாக தென்படாமல் அவர் இருந்துள்ளார். ஆனால் பின்னர் அவரது ஆக்சிஸன் அளவு முற்றிலும் குறைந்துள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸால் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அவரைப் போன்று கொரோனாவை அலட்சியமாக நினைத்துக்கொண்டிருந்த அமெரிக்க இளைஞர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இளைஞர்களையும் கொரோனா வைரஸ் மரணமடையச் செய்வதாகவும், அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.