கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்? - பின்னணியும் தெளிவும்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்? - பின்னணியும் தெளிவும்
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடைவெளி குழப்பம் நீடிப்பது ஏன்? - பின்னணியும் தெளிவும்
Published on

கொரோனா தடுப்பூசிகளில் இந்தியாவில் தற்போதைக்கு வழக்கத்தில் இருப்பவை கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகியவை மட்டும்தான். இவற்றிலும்கூட, நிலவிவரும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பரவலாக கோவிஷீல்டு தடுப்பூசிகள்தான் போடப்படுகின்றன. முதலில் கோவிஷீல்டு தடுப்பூசி, ஒரு டோஸ் போட்டால் போதுமென்ற நிலை இருந்துவந்த நிலையில், இறுதியில் இரண்டு டோஸ் என முடிவு செய்யப்பட்டது.

இரண்டு டோஸ் என முடிவுசெய்யப்பட்டவுடன், அதன் இடைவெளி குறித்த விவாதங்கள் எழுந்தன. முதலில் அது 4 வாரங்கள் என்று முடிவுசெய்யப்பட்டது. இருப்பினும் அடுத்தடுத்த ஏற்பட்ட தடுப்பூசி உற்பத்தி குறைவு / தட்டுப்பாடு காரணங்களால், அது 4 முதல் 12 வாரங்களாக அது அதிகரித்தது. அன்று தொடங்கி இன்று வரை இந்த இடைவெளிகுழப்பம் தொடர்கிறது. ஆனால், பிற தடுப்பூசிகளுக்கு அப்படியில்லை. இதன் பின்னணிதான் என்ன? இங்கு விரிவாகக் காணலாம்.

இந்த இடைவெளிக்கான ஆய்வுகள் யாவும் யு.கே, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய இடங்களில் நடந்தன. அதன்முடிவில், 6 வாரத்துக்குட்பட்டு இரண்டு டோஸ் தடுப்பூசி போடுபவர்களுக்கு தடுப்பூசியின் செயல்பாடு 55 சதவிகிதம் நன்றாக இருப்பதாகவும்; இதுவே 12 வார இடைவெளிக்குள் இரு டோஸ் எடுப்பவர்களுக்கு 80 சதவிகிதத்தை ஒட்டி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 2021 ல் மூன்றாவது கட்டமாக நடந்த க்ளினிக்கல் ட்ரையலில், 4 வார இடைவெளிக்குள் போட்டுக்கொள்பவர்களுக்கு 76 சதவிகிதம் தடுப்பூசி செயல்திறன் கிடைப்பது உறுதியானது.

முன்னுக்குப் பிறனாக தெரிந்துக்கொண்டிருந்த இந்த முடிவுகளை தொடர்ந்து, ‘எவ்வளவு காலம் அதிக இடைவெளியில் தடுப்பூசி டோஸ்கள் போடப்படுகிறதோ, அதற்கேற்ப செயல்திறனும் அதிகமாக இருக்கிறது’ என்ற நிபுணர் குரல் ஓங்கியது. அதன் தொடர்ச்சியாக யு.கே.-வில் 12 வார இடைவெளியில் தடுப்பூசி போடுவது என்ற வழக்கம் கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கனடா – ஸ்பெயின் – தாய்லாந்து – வங்கதேசம் ஆகிய இடங்களிலும் இந்த இடைவெளி 12 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியாவில் இந்த தடுப்பூசி இடைவெளி எப்படி நிர்ணயிக்கப்பட்டது?

இந்தியாவில் ஜனவரி 2021 தொடக்கத்தில் 4 முதல் 6 வார இடைவெளியில் தடுப்பூசி போடப்பட்டது. காரணம், இந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வு, இந்த இடைவெளியையே அறிவுறுத்தியது.

இதேபோல இந்தியாவின் மற்றுமொரு தடுப்பூசியாக கோவேக்சினுக்கும் 4 – 6 வார இடைவெளிதான் நிர்ணயிக்கப்பட்டது. ஒரே இடைவெளிக்குள் இரே கால இடைவெளி இருந்தால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாது என அரசும் நம்பியது.

அப்படியான சூழலில், உலக நாடுகள் அனைத்திலும் ஜனவரியில் அடுத்தடுத்த வாரங்களில், கோவிஷீல்டை பற்றிய அறிவிப்புகள் வெளிவந்தன. அனைத்துமே, இடைவெளியை அதிகரித்தால் செயல்திறன் அதிகரிக்குமென்றே சொன்னது. தொடர்ச்சியான அந்த அறிவிப்புகளை தொடர்ந்து, மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழுவேவும் முன்வந்து, ‘கோவிஷீல்டு தடுப்பூசியை 4 முதல் 12 வாரம் வரை என வைத்துக்கொள்வது நல்லது’ என்று நாடுகளுக்கு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை ஏற்று, மார்ச் 23, 2021-ல் இந்தியாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது.

மார்ச் இறுதியில் விதிக்கப்பட்ட இந்த இரு வார இடைவெளி நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகி ஒருவாரத்துக்குள்ளேவும், ஏப்ரல் 2021-ல், இந்தியாவில் தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த தேசிய நோய்த்தடுப்பு தொடர்பான ஆலோசனைக்குழு, கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரமாக நீட்டித்தது. இந்த இடைவெளி நீட்டிப்பின்போது, கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்ததால், முதலில் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்ட தொடங்கியது.

பிற தடுப்பூசி டோஸ்களுக்கு, இடைவெளி மாற்றம் தொடர்பான சிக்கல் வராதது ஏன்?

கோவிஷீல்டு, வைரல் வெக்டார் வகை தடுப்பூசி. வைரஸ் என்பது, கூட்டுக்குள் அடைந்த மரபணு கூறுகள் போன்றது. எப்போது அது பிற உயிரனங்களின் செல்லுக்குள் நுழைந்தால் மட்டுமே அதன் மரபணு கூறுகள் செயல்படும்.

வெக்டார் தடுப்பூசி என்பது, எம்.ஆர்.என்.ஏ.க்களை கொண்டு வைரஸின் டி.என்.ஏ.க்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்படுபவை. அந்த டி.என்.ஏ.க்கள், உடலில் செலுத்தப்படுவதற்கான வைரஸில் பொருத்தப்படும். அதாவது, அடினோ வைரஸ் என்று அழைப்படும். அந்த அடினோ வைரஸ், உடலிலுள்ள செல்களில் செலுத்தப்படும். அதாவது, ‘மாதிரி’ வைரஸ் போன்ற ஒன்று, உடலுக்குள் செலுத்தப்பட்டு உடலை நோய்க்கு எதிராக வினையாற்ற தயார்படுத்தும்.

கோவேக்சின், இப்படிப்பட்ட தடுப்பூசியல்ல. உயிரற்ற / கொல்லப்பட்ட வைரஸை கொண்டு உருவாக்கப்படும். இப்படி உயிரற்ற வைரஸ் மூலம் செலுத்தப்படும் தடுப்பூசியில், முதல் டோஸ் தடுப்பூசி நோய் எதிர்ப்பு திறனை தூண்டிதான் விடும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி, அடுத்த 4 – 6 வாரத்தில் அளிக்கப்பட்டால்தான், அது தீவிரமாக செயல்படும்.

ஆக, கோவிஷீல்டில் வகையான வெக்டார் தடுப்பூசிகளுக்கு இரண்டாவது டோஸென்பது காலம் தாழ்த்தி கிடைப்பது சிக்கலை ஏற்படுத்தாது. இதனால்தான், அதற்கு மட்டும் கால நீட்டிப்பு நீண்டுக்கொண்டே இருக்கிறது.

இப்போது என்ன மாறியிருக்கிறது?

இந்தியாவில் மே 13, 2021 முதல் கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளியானது, 12 முதல் 16 வாரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த நீட்டிப்பு நடந்த சில நாட்களில், இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை சார்பில் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு 33 சதவிகிதம் கொரோனா அறிகுறிகள் தெரிவதில்லை என்று சொல்லப்பட்டது. முன்னராக இது 65 – 85 % என்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வை தொடர்ந்து, யு.கே.வில் கால இடைவெளியானது 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு 8 – 12 வாரமென்றும்; அதற்கு குறைவானவர்களுக்கு 12 வாரமென்றும் நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ச்சியான அறிவிப்புக்கிடையில்தான், இந்தியாவில் ஜூன் தொடக்கத்தில் டெல்டா வகை கொரோனாவான பி.1.617.2 திரிபு கொரோனா தெரியவந்தது. முன்னதாக ஆல்பா வகை கொரோனாவோடு 50 – 70% ஒத்துப்போன இந்த டெல்டா வகை கொரோனா, மோசமான பாதிப்பையும் ஏற்படுத்த உகந்தது என்றே கூறப்பட்டது. இதனால், ஆல்பாவுக்கு எதிராக செயல்பட்ட கோவிஷீல்டு, இதற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுமென நம்பப்பட்டது. இப்போது புதிதாக உருவாகியிருக்கும் டெல்டா ப்ளஸ் கொரோனாவுக்கு எதிராகவும் இது செயல்படும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், அடிப்படை அறிவியல்பூர்வமான காரணங்களினால்தான் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 4-6 வாரங்களில் இருந்து 12-16 வாரங்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு சில தினங்களுக்கு முன் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் குறித்து செய்தி தொ தொலைக்காட்சியிடம் பேசினார். அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை சம்மந்தமான அடிப்படை அறிவியல்பூர்வமான காரணங்களினால், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 4-6 வாரங்களில் இருந்து 12-16 வாரங்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.‌

இதுகுறித்து அவர் கூறும்போது, "இடைவெளி அதிகரிக்கும்போது அடினோவெக்டர் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதற்கான அடிப்படை அறிவியல் காரணங்கள் இருப்பதால் இது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும் என்று நாங்களும் கருதினோம். எனவே இந்த இடைவெளியை 12-16 வாரங்களாக உயர்த்த மே 13-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது. அனைவராலும் சரியாக 12 வாரங்களில் மீண்டும் வர இயலாததால், இதன் மூலம் நெகிழ்வுத்தன்மையும் அளிக்கப்படுகிறது.

முன்னதாக நான்கு வார இடைவெளி என்ற முடிவு, அப்போது கைவசம் இருந்த சோதனைத் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இடைவெளி அதிகரிக்கப்படும்போது தடுப்பூசியின் செயல்திறன் மேம்படுவதாகக் கிடைத்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி அதிகரிக்கப்பட்டது.

கோவிஷீல்டு பற்றிய ஆரம்பக்கட்ட ஆய்வுகள் வெவ்வேறு முடிவுகளை வழங்கின. இங்கிலாந்து போன்ற நாடுகள் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியபோது 12 வார இடைவெளியைப் பின்பற்றின. எங்களுக்கு இந்தத் தரவு தெரிய வந்தபோது, இடைவெளி குறித்த முடிவை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதால் நமது சோதனை தரவுகளில் சிறந்த எதிர்ப்பு ஆற்றல் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் நான்கு வார இடைவெளியை நாங்கள் அறிவித்தோம்.

பின்னர் கூடுதல் அறிவியல் மற்றும் ஆய்வகத் தரவுகளை நாம் பெற்றபோது, இடைவெளி நான்கு வாரங்களாக இருக்கும்போது தடுப்பூசியின் செயல் திறன் சுமார் 57% ஆகவும், எட்டு வாரங்களாக இருக்கும்போது 60% ஆக இருப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்தது. அதன் அடிப்படையில், இடைவெளியை 4 வாரங்கள் முதல் 8 வாரங்களாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதினோம்" என்றார்.

ஆக, தடுப்பூசிக்காக இடைவெளி அதிகரிப்புக்கும் – தடுப்பூசி பற்றாக்குறைக்கும் நிச்சயம் தொடர்பிருக்காது என முழுமையாக நம்பலாம்.

கோவிஷீல்ட் முதல் தடுப்பூசி செலுத்தியவர்கள் கல்வி, வேலை போன்ற அத்தியாவசியப் பணிகளுக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்பட்டால், அவர்கள் 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதும் உண்மைதான்.  இருப்பினும், இந்த கால இடைவெளி ‘அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே சொல்லப்பட்டிருப்பதாகவும், மற்றபடி பொதுபயன்பாட்டுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை’ என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தகவல் உறுட

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com