யார் இந்த ஆறுமுகம் ? பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்

யார் இந்த ஆறுமுகம் ? பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்
யார் இந்த ஆறுமுகம் ? பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்
Published on

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சியாளர் என கூறி கேவை நரசிங்கபுரம் கல்லூரி மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான ஆறுமுகம் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை நடத்திய விசாரணையில் ஆறுமுகம் தன்னை மத்திய அரசின் ஊழியர் என்றும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இதனை மறுத்துள்ளது. தங்களுக்கு இந்த பயிற்சிக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளனர்

ஆறுமுகம் யார் என தேடிய போது அவரது பேஸ்புக் கணக்கில் 2011-ம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சியாளராக சேந்துள்ளதாகவும் , இப்போது வரை அந்த பணியில் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையிலும் இந்த விஷயத்தை அவர் கூறியுள்ளார். மேலும் பல்வேறு கல்லூரிகளில் பயிற்சி கொடுப்பது போன்ற புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார். ஆனால் அவை அனைத்திலும் கருத்தரங்கில் பேசி இதன் முக்கியத்துவம் குறித்து தெரிவிப்பது போன்றே இடம் பெற்றுள்ளதே தவிர எங்கும் வகுப்பறைக்கு வெளியே பயிற்சி அளிப்பது போன்ற எந்த குறிப்பும் இல்லை. 

கோயம்புத்தூரை சுற்றியுள்ள சில முக்கிய பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று இக்கட்டான சூழல்களில் தங்களை எப்படி மாணவர்கள் பாதுகாத்து கொள்வது என்ற தலைப்பில் அவர் பேசியுள்ளார். இதனை கல்லூரிகளின் இணையப் பக்கத்தில் பார்க்க முடிகிறது. இதனை ஆறுமுகம் திட்டம் தீட்டி செயல்படுத்தியுள்ளாரா என்ற சந்தேகமும் எழுகிறது.ஆறுமுகத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்படுகிறது. 2017-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி இந்த கடிதம் அனுப்பப்படுகிறது. அந்த கடிதத்தில் மத்திய அரசின் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சியானது அனைத்து கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது என்றும் தங்களது கல்லூரியிலும் இதனை செய்ய அனுமதி வேண்டும் என கேட்டுள்ளார்.

 மேலும் இந்த பயிற்சி முழுவதும் இலவசம் என்றும் பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ.50-ல் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2016லும் இதே போன்று கடிதம் எழுதி முக்கிய கல்லூரிகளில் பயிற்சி கொடுத்துள்ளார். ஆனால் அவை அனைத்துமே தனியார் கல்லூரிகள். 

மற்ற கல்லூரிகளைப் போலவே,மாணவி லோகேஸ்வரி படித்த கலைமகள் கல்லூரியும் அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு பயிற்சிக்கு அனுமதி அளித்துள்ளது. ஆறுமுகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் ஒரு இ-மெயில் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற போன் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. எண்ணை தொடர்பு கொண்ட போது அது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக தெரிவித்தது. மெயில் ஐ.டி. செயல்பாட்டில் உள்ளது ஆனால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய செயல்பாட்டில் இல்லை. அதே நேரத்தில் தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையமும் சாதாரணம் ஜிமெயில் ஐ.டி.களை பயன்படுத்தி வருகிறது. 

மேலே உள்ள படங்கள் ஆறுமுகம் பயிற்சியளித்ததாக இணையத்தில் கிடைக்கும் தகவல்கள். இன்னும் பல கல்லூரிகளில் ஆறுமுகம் இதே போன்ற பயிற்சியை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால் கோயம்புத்தூர் சம்பவம் முதல்முறையாக வகுப்பறைக்கு வெளியே பயிற்சி கொடுத்ததால் நேர்ந்த சோகமாகிப் போயிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com