டெல்டா பகுதிகளில் ஒரு பகுதியிலிருந்து ஈரப்பதமிகுந்த கீழைக்காற்று, மற்றொரு பகுதியிலிருந்து வறண்ட வடக்கு காற்று என இருவேறு காற்று குவிந்து வருவதால் தெற்கு டெல்டா பகுதிகளில் காலை முதல் மழை தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பரவலாக பலத்த மழை பதிவாகும்.
தெற்கு டெல்டா பகுதிகளான திருப்பூண்டி, தலைஞாயிறு, திருக்குவளை,வேதாரண்யம்,கோடியக்கரை, திருத்துறைப்பூண்டி மன்னார்குடி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மிககனமழை பதிவாகும். தஞ்சாவூர் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
மழையின் தீவிரமானது அடுத்த 2 மணி நேரங்களுக்கு சற்று பலத்துக் காணப்படும்.
அதே சமயம்,டெல்டா மாவட்டங்களில் பெய்துக்கொண்டிருக்கும் இந்த மழையானது பிற்பகல் 3 மணிக்கு பின்பு மழையின் தாக்கம் படிப்படியாக குறையும்.
தன் தமிழகத்தில் புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விட்டு விட்டு மழை தொடரும் என்றும் சில இடங்களில் கனமழையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.