வானியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் கலிலியோ கலிலியின் (Galileo Galilei) பிறந்ததினம் இன்று.
விண்வெளி ஆராய்சியாளார்கள் இன்று அதிநவீன தொலைநோக்கியின் உதவியால் சூரிய குடும்பத்தை தாண்டி பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரத்தை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மலைக்கத்தக்க பல சாதனைகளை இன்றைய அறிவியல் உலகம் கண்டுபிடிப்பதற்கு பாதை வகுத்து கொடுத்தவர் கலிலியோ கலிலி .
கலிலியோ கலிலி,1564ல் இத்தாலியின் பிசா நகரத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர், பிறகு தனது ஆர்வத்தை இயற்பியல் மீது செலுத்தினார். இவர் படிக்கும் காலத்திலேயே நிறைய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் பிறகு தான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக பணியாற்றினார்.
மாணவர்களுக்கு அரிஸ்டாட்டில் கூறிய (எடை கூட இருக்கும் பொருள் மற்றும் எடை குறைவாக இருக்கும் பொருளை மேலிருந்து கீழே போட்டால், எடை அதிகமாக இருப்பது முதலில் விழும்) என்ற கோட்பாட்டை பொய் என்று நிரூபிக்கும் வகையில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து இரு வேறு எடை கொண்ட பொருளை கீழே போட்டார். இவர் கூற்றின்படி இரு பொருள்களும் ஒரே நேரத்தில் பூமியில் வந்து விழுந்தது. இந்நிகழ்சியால், மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
கண்டுபிடிப்புகளையும் சோதனை முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் கலிலியோ. அதன் பலனாய் 1609ல் ஒரு தொலைநோக்கி ஒன்றை கண்டுபிடித்தார். அதாவது, ஹான்ஸ் லிப்பெர்சேய் (Hans Lippershey) என்கிற ஒரு லென்ஸ் மேக்கர் கண்டுபிடிச்ச டெலெஸ்கோப் (telescope) வழியா பாத்தா பொருட்கள் எல்லாம் தலைகீழாக தெரிஞ்சது. அதை மாற்றி பொருட்கள் நேராகத் தெரியும் படியும் மேலும் சில திருத்தங்களும் செய்து, இப்போ நம்ப பயன்படுத்திட்டு இருக்க டெலஸ்கோப்க்கு வித்திட்டவர்தான் கலிலியோ.அதன் மூலம் வானவியலின் ஆராய்சியை மேற்கொண்டார்.
facts which at first seem improbable will even on scant explanation drop the cloak which has hidden them and stand forth in naked and simple beauty
கலிலியோ வானிலை ஆராய்சியை மேற்கொண்டதற்கு முக்கிய காரணம், நீண்ட காலமாக நம்பிக்கையாக இருந்த ‘பூமி தான் மையத்தில் இருக்கிறது சூரியன் உள்ளிட்ட கோள்கள் அதனை சுற்றி வருகிறது’ என்ற கருத்தை உடைத்து ‘சூரியன் தான் மையத்தில் இருக்கிறது; பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றுவருகிறது” என்ற புதிய கோட்பாடு கோபர்நிகஸ் கண்டுபிடித்தார். எனினும், சக்தி வாய்ந்த கத்தோலிக்க தலைமையகம் தனக்கு தண்டனை அளித்துவிடும் என்று அஞ்சி தான் கண்டுபிடித்ததை அவர் வெளியில் சொல்லவில்லை.
‘பிரபஞ்சத்தின் மையத்தில் பூமி இருக்கிறது. பூமியைச் சுற்றும் கிரகங்கள் கோளவடிவில் இருக்கின்றன’ என்ற கிறிஸ்தவ மத கத்தோலிக்க தலைமையகத்தின் நம்பிக்கைக்கு எதிராக பேச யாருக்கும் அன்று தைரியமில்லை. ஏனெனில் பைபிள் இப்படித்தான் போதித்தது. பைபிள் எதைச் சொல்கிறதோ அதுதான் மாற்றமுடியாத உண்மை என்றும், பைபிளின் போதனைக்கு மாறாக யார் கருத்து சொன்னாலும் அது குற்றம் என்றும் கருதப்பட்டது. பைபிளின் கருத்தை மறுத்தால், அந்த காலகட்டத்தில் மரணதண்டனைதான் விதிக்கப்படும்.
அந்த நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இத்தகைய சூழலில் தான் கோபர் நிக்ஸ் கண்டு அடைந்த உண்மையின் மகத்துவத்தை அறிந்த கலிலியோ அதனை நிரூபித்து காட்ட விரும்பினார்.
அதாவது சூரியனை சுற்றி தான் கோள்களும் பூமியும் வலம் வருகிறது என்று முதன்முதலில் copernicus சொன்ன வார்த்தையை நிரூபிக்க, தொலை நோக்கியின் உதவியால் வானவியல் ஆராய்சியை மேற்கொண்டார்.
தொலைநோக்கியின் உதவியால் சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் கோள்கள் என்றும், வியாழன் கிரகத்திற்கு 4 துனைக்கோள்கள் உண்டு என்றும், சனி கிரகத்தை சுற்றி வளையம் இருக்கிறது என்றும் உலகிற்கு சொன்ன முதல் விஞ்ஞானி இவர்தான். ஆனால் இவரின் இக்கருத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவர் ஏதோ சூழ்ச்சிகாரர், மந்திரவாதி என்று மக்களால் ஒதுக்கப்பட்டார். அதனால் இவர் பிசா நகரத்தை விடுத்து, பிரான்ஸில் குடியேறி படுவா பல்கழைகழகத்தில் பணியாற்றினார்.
அத்துடன் இல்லாமல், தனது கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக வெளியிட்டார். அதன் பிறகு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தாலும், மக்கள் இவரின் கூற்றுக்கு எதிர்ப்பை கிளப்பினர். ரோமன் கத்தோலிக்க தேவாலயம் இவர் கடவுள் மறுப்பாளார், மதத்திற்கு எதிராக செயல் புரிகிறார் என்று கூறி அரசாங்கம் இவரை கைது செய்தது. ஆனால் அவரோ மதத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தான் எதிரானவன் அல்ல என்றும் கடவுள் கொடுத்த அறிவை பயன்படுத்தக் கூடாது என்பது எப்படி சரியாக இருக்கும் என்று வாதிட்டார். அதனை அவர்கள் ஏற்கவில்லை.
இருப்பினும் இவர் தனது ஆராய்ச்சியை நிறுத்தவில்லை. தொடர்ந்து தொலைநோக்கியில் புதுமையை கொண்டு வந்து வானவியல் ஆராய்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து தனது ஆராய்சியில் ஈடுபட்டவர் தனது 78 வது வயதில் காலமானார்.
nature is relentless and unchangeable and it is indifferent as to whether its hidden reasons and actions are understandable to man or not
நாம் எப்பொழுதும் ஆராய்சியாளர்கள் ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் சொல்லும் கருத்துகளை உடனடியாக ஒப்புக்கொள்வதில்லை. நீண்ட காலம் நம் மூளையில் ஏற்றப்பட்ட ஒரு கருத்தை உடனடியாக விட தயாராக இல்லை என்பதும் அதன் பின்னால் ஒரு புனித பிம்பத்தை கட்டமைப்பதும் தான் அதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
கலிலியோ உயிரோடு இருக்கும் வரை இவரது ஆராய்ச்சிகள் அனைத்தும் பொய் தவறான கருத்தை முன்வைக்கிறார் மதத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று சொல்லிய மக்கள் இவர் இறந்ததும் இவர் எழுதிய நூல்களை ஆராய்ந்து அது உண்மை பலரும் நிரூபித்தனர். இவரது ஆராய்ச்சி பல வானியல் ஆராய்சியாளர்கள் உருவாவதற்கும் வானியல் துறை மிகப்பெரிய அளவில் விரிவடையவும் காரணமாக அமைந்தது. அதனால் தான் இவரை நவீன வானியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நவீன அறிவியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.