உலக பிரெய்லி தினம் ஏன் வந்தது? பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகள் சந்தித்து வரும் சிக்கல்கள் என்ன?

உலக பிரெய்லி தினம் ஏன் வந்தது? அதை நாம் ஏன் கொண்டாடவேண்டும்? என்பதை இதில் பார்க்கலாம்.
braille day
braille dayPT
Published on

உலக பிரெய்லி தினம் இன்று.

உலக பிரெய்லி தினம் ஏன் வந்தது? அதை நாம் ஏன் கொண்டாடவேண்டும்? என்பதை இதில் பார்க்கலாம்.

பார்வை என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் மிக முக்கியமான ஒன்று. பார்வை இல்லையென்றால் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். இருப்பினும் பார்வையில்லை ஒருபொழுதும் குறைபாடு என்ற அர்த்தத்தில் பார்க்கக் கூடாது. அதனால் அதான் அவர்களை பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்று திறனாளிகள் என்று நாம் அழைக்கிறோம்.

ஒரு கிராமத்தில் பார்வையற்ற ஆறு பேர் யானை எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள யானையைப் பார்க்கச் சென்ற கதையை, 1872 இல் அவர் எழுதிய பிரபல அமெரிக்க கவிஞர் 'ஜான் காட்ஃப்ரே சாக்ஸ்' எழுதிய ”பார்வையற்ற மனிதர்களும் யானையும்” என்ற கதை நம் மனதை உருக்குவதாக இருக்கும். பார்வை இல்லாதவர்கள் யானையை எப்படி அறிந்துக்கொள்கிறார்கள் என்று அவர் தனது கதையில் விவரித்திருப்பார். பிறவியிலேயே பார்வையற்றவர்கள் தங்களுக்கென்று தனிப்பார்வையில் யானையை அறிந்துக்கொள்வதை இக்கதையில் நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

பிரெய்லி தினம் எப்படி வந்தது என்பதை பார்க்கலாம்.

லூயிஸ் பிரெயிலின் என்பவர் 1809 ஜனவரி 4 ம் தேதி பிரான்சில் பிறந்தவர். சிறு வயதில் விபத்து ஒன்றில் தனது பார்வையை இழந்திருக்கிறார். ஆனால் அவர் தனது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள விரும்பி, தனது 15 வது வயதில் தனக்கென்று பிரத்தேய எழுத்துமுறையை உருவாக்கினார். இவரின் இந்த எழுத்துமுறையை பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் பலரும் கற்று பயனடைந்தனர். பார்வை மாற்றுத்திறனாளியான இவர் பார்வை மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்காக கண்டுப்பிடிக்கப்பட்ட பிரத்யேக எழுத்து தான் பிரெய்லி. இந்த பிரெய்லி உலகம் முழுதும் பார்வையற்றவர்கள் படிக்கும் ஒரு படிப்பாக இன்று வரை இயங்கிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி இல்லாததும், பள்ளி கல்லூரிகளில் உயர்படிப்பிற்கான போதிய வசதி இல்லாததும் ஒரு காரணம்.

அறிவியலும் விஞ்ஞானமும் பெருகி வரும் இக்காலகட்டத்தில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை இன்னும் அதளபாதாளத்திலேயே இருக்கிறது. இவர்களுக்கென்று உணவகங்கள், வங்கிகள் மருத்துவமனைகள் போன்ற பல நிறுவனங்களில் உள்ள அறிக்கைகளை தெரிந்துக்கொள்ள அல்லது தங்களுக்கான மெனுகளை கேட்டுப்பெற போதிய வசதிகள் இல்லை. அதனால் அவர்கள் இது போன்ற இடங்களில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கவேண்டியுள்ளது.

இந்தநிலை மாறவேண்டுமென்றால் மக்களிடையே இவர்களை பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை. தகவல்தொழில்நுட்பம் அதிகரித்து வரும் இச்சமயத்தில் இவர்களுக்கான பிரத்யேக கணினி பயன்பாட்டை உருவாக்கி, இவர்களுக்கு மக்களின் மத்தியில் வாலைவாய்ப்புகளை அதிகரிக்க ஆவண செய்யவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com