பிளாஸ்டிக் பைகளுக்கு 'டாடா' ! வரவேற்போம் சணல் பைகளை !

பிளாஸ்டிக் பைகளுக்கு 'டாடா' ! வரவேற்போம் சணல் பைகளை !
பிளாஸ்டிக் பைகளுக்கு 'டாடா' ! வரவேற்போம் சணல் பைகளை !
Published on

ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க உள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சிவகாசியில் சணல் பைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது சிவகாசியில் காய்கறி வாங்குவது முதல் கல்லூரிக்கு கொண்டு செல்வது வரை பல்வேறு வடிவங்களில் சணல் பைகள் தயாராகி வருகிறது. 

பட்டாசு அச்சகங்களுக்கு புகழ் பெற்ற சிவகாசியில் தற்பொழுது இயற்கையான முறையிலும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற வகையிலும் பயன்தரக் கூடிய சாக்கு பைகள் தயாரிக்கும் பணிகள் குடிசை தொழிளாக நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக எளிதில் மக்கும் தன்மை கொண்ட சாக்கு பைகள் தயாரிக்கும் பணிகள் சிவகாசியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக பாலிதீன், காட்டன் துணிகள் உள்ளிட்ட பொருட்களில் காய்கறி வாங்குவது, ஜவுளிக் கடைகள், திருமண தாம்பூலப்பைகள் என பல்வேறு வகையான பைகள் தயாரிக்கும் பணிகளை செய்துவருகிறார் பாலாஜி. தற்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட உள்ள பாலிதீன் பைகளை தயார் செய்வதை அறவே நிறுத்திவிட்டு இயற்கையான முறையிலும் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையிலும், எளிதில் மக்கும் தன்மை கொண்ட சணல் பைகள் மட்டுமே தயாரித்து வருகிறார். 

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பயன்படும் பைகள், திருமண தாம்பூல பைகள், ஜவுளிக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஜவுளிகளுடன் வழங்கும் பைகள், உணவுக் கூடை பைகள், பெண்களுக்கான கை பைகள், சிறுவர்களுக்கான கை பைகள், அலுவலக முக்கிய டாக்குமென்ட் வைக்ககூடிய பைல்கள், என 100வகையான பைகள் தயாறிக்கிறார். 

அதுமட்டுமின்றி பல்வேறு வண்ணங்களிலும் , வடிவங்களிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் எழுத்துக்கள், பூக்கள் பதித்து பைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இயற்கைக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத வகையில் தயார் செய்யப்படும் சனல் பைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.  மக்கள் படிப்படியாக சணல் பைகளுக்கு மாறி வருவதாக கூறும் உற்பத்தியாளர் பாலாஜி, இது குறித்த விழிப்புணர்வு ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் சனல் பைகளை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மாறிவிடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பைகளின் விலை சற்று குறைவாக இருந்தாலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் அதனை தொடர்ந்து குப்பைகளுக்கு செல்லும்பொழுது மக்காமல் நிலத்தடி நீரை மண்ணுக்குள் செல்லவிடாமல் தடுக்கிறது. இதனால் சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கும் விளைவிக்கும் நிலையில் சணல் பைகளுக்கு விலை சற்று கூடுதல் என்றாலும் பல ஆண்டுகள் பயனபடுத்திக் கொள்ளலாம் என்கிறார் பாலாஜி. பயன்பாட்டிற்கு பின்னரும் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத வகையில் எளிதில் மக்கும் தன்மை கொண்டுள்ளதால் இயற்கையை நேசிக்கும் அனைவரும் பெருமளவில் வாங்கி பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார்.

சணல் பைகளின் பயன்பாட்டை பொதுமக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் மக்களை கவரும் வகையில் புதிய டிசைன்களில் வடிவமைப்படுகிறது. சாதாரணமாக ஒரு காய்கறி கடைக்கு செல்பவர்களுக்கு ஒரே பையில் தனித்தனி அரங்குகள் அமைத்து காய்கறிகளை தனித்தனியாக வைக்கும் வகையில் வடிவமைப்பது இருக்கிறோம். இதன் விலை 50 ரூபாய் முதல்  60 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக கூறுகிறார் பாலாஜி. 10 ஆண்டுகள் வரை காய்கறி பையை பயன்படுத்தலாம் எனவும் பிளாஸ்டிக் பொருட்களினால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு என்றாலும் அதன் பயன்பாட்டு காலமும் குறைவு என்பதால் பணம் விரையம் ஏற்படுகிறது.

ஆனால் சணல் பைகள் ஒரு முறை வாங்கினால் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிக பட்சம் 10 ஆண்டுகள் வரை உழைக்கும் என்பதால் பணம் விரையத்தையும் தடுக்கலாம் என்கிறார். மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இன்னும் பல்வேறு வடிவங்களில் சனல் பைகள் தயாரிக்க உள்ளதாகவும் தற்பொழுது 30 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் மக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் குறைந்த லாபத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூடிய விரைவில் மக்களிடையே முழுமையான வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையுடன் சனல் பைகளை தயார் செய்வதாகவும் கூறுகிறார்.

சாதரான பாலிதீன், காட்டன் துணிகளால் தயாரிக்கப்படும் பைகளை விட சனல் பைகள் தயாரிக்க கூடுதல் நேரம் செலவாவதாக கூறும் அவர், சனல் பைகள் தயாரிப்பு பணியில் ஈடுபடும் பெண்கள் சனல் பைகள் தயாரிப்பிற்கு சற்று கூடுதல் கூலி கிடைப்பதாகவும் கூறிகின்றனர்.  நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மையும் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் உள்ள சனல் பைகள் தயாரிப்பதால் மனதிற்கு சற்று நிம்மதி கிடைப்பதாக அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

வாடிக்கையாளர்களின் மனதை கவரும் வைகையில் பல்வேறு வடிவங்களில் எந்தவித குறைபாடுகளும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஒவ்வொரு பைகள் தயாரிப்பிற்கும் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு தயாரிப்பதாக கூறும் பெண்கள் வரும் காலங்களில் முழுமையாக சனல் பைகள் மட்டுமே தயாரிக்கும் நிலை ஏற்படும் என்பதால் மிக நேர்த்தியாவும், விரைவாகவும் தயாரிக்க தங்களை தயார்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

இயற்கைக்கு முரணான பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பதால் தற்பொழுது முதலே பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சனல் பைகளை வாங்க உள்ளதாக கூறுகிறார் புதிதாக ஜவுளிக்கடை நடத்தவுள்ள இளைஞர் விக்னேஷ்.

துவக்கத்தில் சற்று விலை அதிகம் கொடுத்து வாங்கினாலும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆடைகளை வைத்து கொடுக்கும் பைகள் நீண்ட நாட்கள் அவர்களுக்கு நீண்ட நாட்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலும் இயற்கைக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத பைகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சனல் பைகளை தேர்ந்தேடுத்துள்ளதாகவும் கூருகிறார். வாடிக்கையாளர்களுக்கும் இந்த வகை பைகளை விரும்புவார்கள் எனவும் நம்பிக்கை தேர்வுக்கும் விக்னேஷ் இயற்கையை பாதுகாக்க நமது பயன்பாட்டினை மாற்றம் செய்து இதுபோன்ற இயற்கையை பாதுகாக்கும் பொருட்களை உபயோகப்படுத்தினால் நல்ல நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையில் சனல் பைகளை வாங்குவதாகவும் கூறுகிறார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு ஒருபுறமிருக்க மாற்றாக இதுபோன்ற சணல், காட்டன், தேக்கு இலைகள் உள்ளிட்ட இயற்கையான பொருட்களின் பயன்பாடுகள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

தகவல்கள்; G.கணேஷ்குமார்  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com