பெண்களுக்கு கர்ப்பம் குறித்த பயத்தை ஏற்படுத்தும் நோய் டோகோபோபியா என்று அழைக்கப்படுகிறது .
குழந்தை வேண்டும் என்ற ஒரு பெண்ணின் முடிவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பிற பெண்கள் தங்கள் கர்ப்ப காலங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறும்போது அதை இவர்கள் எதிர்மறையாக எடுத்துக் கொள்கின்றனர். இதன் விளைவாக பெண்கள் தங்கள் கருவை கலைக்க கூடிய நிலைக்கு அவர்களை இந்நோய் தள்ளுகிறது. இந்த நோயானது இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. முதல் வகையானது கர்ப்பம் குறித்த எந்த முன் அனுபவமும் இல்லாமல் குழந்தை பிறப்பு குறித்து பிறர் கூறுவது கேட்டு அவர்களுக்கு ஏற்படும் அச்சம். இரண்டாவது வகை முந்தைய கால கர்ப்ப காலத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக ஏற்படும் அச்சம். இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர்களது பயத்தை போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். கர்ப்பம் குறித்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கினாலே போதுமானது என கூறுகின்றனர்.