TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
TN Budget 2023-24: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 10 மணி தொடங்கி 2023 - 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துவருகிறார்.

அவர் வழங்கிய பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இங்கே:

* வருவாய் பற்றாக்குறையை ரூ. 60,000 கோடி என்பதிலிருந்து, 30,000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு குறைத்துள்ளோம். மேலும் வரும் ஆண்டுகளில் அது குறைக்கப்படும்.

* மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்

* அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அதற்கு, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோருக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு, ரூ.223 கோடியில் புதிய வீடுகள் கட்டப்படும்.

* ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளை எழுதும் தேர்வர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப்பிரிவு அமைக்கப்படும்.

* சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்

* வயது முதிர்ந்த மேலும் 591 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்

* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

* ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது

* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்

* நகர்ப்புற ஊரக பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் நடைமுறைத்தப்படும்.

* புதிய வண்ணார் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ. 10 கோடி அளிக்கப்படும்.

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

* மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ரூ. 100 கோடியில் புதிய விடுதிகள் அமைக்கப்படும்.

* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள், ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்.

* புதிய விளையாட்டு மையம் - சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ. 30,000 கோடி வரை வங்கிக்கடன் வழங்க இலக்கு வைக்கப்படுகிறது.

* பெண் தொழில்முனைவோருக்காக, அரசு சார்பில் சிறப்பு புத்தொழில் இயக்கம் தொடங்கப்படும்.

சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை WiFi வசதி செய்து தரப்படும்.

* வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும் ரூ.1600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சேலத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளிப் பூங்கா அமைக்க ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ இரயில் திட்டம் ரூ.8500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளுக்கு 9 ஆயிரம் கோடியில் மெட்ரோ இரயில் பாதை அமைக்கப்படும்.

* 1,000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,500 என உதவித்தொகை அதிகரிப்பு; கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,000 என உதவித்தொகை உயர்த்தப்படுகிறது

* சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

* கோவையில் செம்மொழி பூங்கா 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்

மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைத்திட ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

* குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்க ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

* ரூ.38.25 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்க மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் அமைக்கப்படும்.

எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி

உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி 

பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடி (வரவு செலவு திட்டத்தில்)

மாற்றுத்திறனாளிகள் நலன் துறை - ரூ. 1,444 கோடி

மருத்துவத்துறை - ரூ. 18,661 கோடி 

கூட்டுறவுத்துறை துறை - ரூ. 16,262 கோடி

வனம் சுற்றுலாத் துறை - ரூ. 1,248  கோடி

* தொழில்துறை - ரூ. 3,268 கோடி

* சமூகநலத்துறை - ரூ. 5,436 கோடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com